மோடியின் நான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அரசு பதவி யேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறை வடைந்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்கும் வகையில் பயிர்க்காப்பீடு, குறைந்தபட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை சந்தேகத்துக் கிடமான பண பரிவர்த்தனைகளை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
அயல்நாடுகளில் பதுக்கப் பட்ட கருப்புப்பணத்துக்கு ஈடான சொத்துக்களைக் கைப்பற்றும்வகையில் வரி ஏய்ப்புச்சட்டம் திருத்தப்பட்டது,
பினாமிசொத்து சட்டத்தின் மூலம் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டது.தலைமறைவான பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல்செய்ய சட்ட அமலாக்கம் செய்யப்பட்டது.
50 கோடி கிராமங்களை உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடுதிட்டம், ஒருகோடி இளைஞர்களுக்கு திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின்இணைப்பு, கிராமப்புறப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு அளிக்கப் பட்டுள்ளன.
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஒரு கோடி ஏழைகள் வீடுகளைப் பெறுவார்கள். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஏழரை கோடிக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டன.
இரண்டுலட்சம் கோடி ரூபாய் செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப் படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒருலட்சத்து 69 ஆயிரம் கிலோமீட்டர் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் 92 மருத்துவ கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 646 பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்திய எல்லைகளை பாதுகாப் பதற்காகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குகொண்டு வருவதற்காகவும் இந்திய ராணுவம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரில் துல்லியத்தாக்குதல்களை நடத்தியது.
ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம்செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.
2018-19 பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு 62 சதவீதம் அதிகரிக்கப் பட்டு ரூ.4 ஆயிரத்து 700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு, பல்வேறு சாதனைகள் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.