18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டது குறித்த வழக்கின் தீர்ப்பு ஊசி வெடிபோல் வெடித்து விட்டது என் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தவழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம்செல்லும் என்றும், நீதிபதி எம்.சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்ததீர்ப்பு குறித்து இன்று காலையில் கருத்து தெரிவித்திருந்த தமிழிசை சவுந்தரராஜன், 18 எம்எல்ஏ-க்களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்க போகிறதா? புஸ்வானமாக போகப் போகிறதா? என்பது தீர்ப்பின் முடிவில் தெரியும் என்று தெரிவித்திருந்தார். தற்போது தீர்ப்புவெளியான பிறகு தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ இன்று வெளியான தீர்ப்பு புஸ்வானமும் இல்லை. வெடிகுண்டும் இல்லை. தீர்ப்பு ஊசி வெடி போல் வெடித்துவிட்டது. இந்தத் தீர்ப்பால் யாருக்கும் பாதகமும் இல்லை. சாதகமும் இல்லை. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு காத்திருக்கவேண்டும். தற்போது சூழலில் அதிமுகதான் பெரும்பான்மையான அரசு” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.