எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சிதறும்

கடந்த 2014 தேர்தலை விட வரும் 2019 மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சிதறும்

எனக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடக்கிறது. அதை மெகாகூட்டணி என்று அழைக்கிறார்கள். இது ஓர் அரசியல் சாகசமுயற்சி. கடந்த காலங்களில் இதுபோன்ற முயற்சி கள் தோல்வியில் முடிந்துள்ளன. எதிர்காலத்திலும் இந்த முயற்சி வெற்றிபெறாது.

மத்தியில் நிலையான, உறுதியான அரசு அமையவேண்டும் என்பதே மக்களின் விருப்பம். கடந்த 2014-ல் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்தார்கள். 30 ஆண்டுகளுக்குபிறகு மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தது.

எதிர்க்கட்சிகளுக்கு வளர்ச்சி குறித்தோ, நாட்டின் வருங்காலம் குறித்தோ அக்கறைஇல்லை. என்னை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

கடந்த 2014 மக்களவை தேர்தலைவிட 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றி அமோகவெற்றி பெறும். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். வரும் 2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொலைசெய்யும் சம்பவங்கள் வேதனையளிக்கிறது. இது கடுமையான குற்றமாகும். ஒவ்வொரு குடிமக்களின் உயிர், உரிமைகளைப் பாதுகாப்பது அரசின்கடமை.

சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் தெளிவான அறிவுரைகளை வழங்கியுள்ளோம். சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது.

பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளன.

பெண்களின் நலன், முன்னேற்றத்துக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் லட்சக் கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஏழை பெண்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றன. ஜன் தன் யோஜ்னா திட்டத்தில் 16 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

போபர்ஸ் ஒப்பந்தம் போன்றே அனைத்து ஒப்பந்தங்களையும் ஊழல் கண்ணோட்டத்துடன் காங் கிரஸ் பார்க்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது விமானப்படையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனது அரசு விமானப்படையின் பலத்தை அதிகரிக்க ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்செய்துள்ளது. இது நேர்மையான, வெளிப்படையான ஒப்பந்தம்.

கடந்த 2014-ல் எனது தலைமையிலான அரசு பதவியேற்றபோது பொருளாதாரம் சார்ந்த பல்வேறு சவால்கள் தடைக் கற்களாக இருந் தன. அந்த சவால்களை எதிர்கொண்டு தொழில் நடத்த ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி யுள்ளோம். சிவப்பு நாடா நடைமுறை நீக்கப் பட்டுள்ளது. அனைத்து தொழில் துறைகளிலும் முதலீடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் பொருளாதார குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்டம் இயற்றிஉள்ளோம்.

பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள் ளேன். அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதையே இந்தியாவிரும்புகிறது. புதிய பாகிஸ்தான் அரசு, தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

நேபாளத்துடன் சுமுக உறவு தொடர்கிறது. இலங்கையுடனும் நட்புறவு நீடிக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு, நலன்களைப் புரிந்து இலங்கை செயல்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மாலத் தீவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும்.

வாக்கு வங்கி அரசியலுக்காக அசாமில் தேசியகுடிமக்கள் பதிவேடு திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. மக்களுக்கு அளித்த வாக்குறுதி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தற்போதைய பாஜக அரசு அசாமில் குடிமக்கள் பதிவேட்டை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு உச்ச நீதிமன்றத் தின் மீது நம்பிக்கை இல்லை.

கல்விக்காக 32 சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஐஐடி, ஐஐஎம். என்ஐடி உள்ளிட்ட உயர் கல்விநிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. 600 கல்லூரிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டுள் ளது. சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுவது துரதிர்ஷ்டமானது. அனைவரும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் எல்லை விரிவடைந்து வருகிறது. அதேநேரம் சமூக வலைதளங்களை பயன் படுத்துவோர் எல்லை, வரம்புகளை தாண்டக் கூடாது.

மக்களின் பயோமெட்ரிக் தகவல்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதுதொடர்பாக பி.என்.ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஆய்வுசெய்து அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2014-ல் பாஜக ஆட்சி பொறுப்பேற்றபோது 2 மொபைல்போன் ஆலைகள் மட்டுமே செயல்பட்டன. இந்த எண்ணிக்கை தற்போது 120 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

முத்ரா திட்டத்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3.5 கோடி பேர் முதல்முறை தொழில் முனைவோர். கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூல் நடை முறை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. எங்கள் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஜிஎஸ்டி தொடர் பாக எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

அம்பேத்கரின் கனவு முழுமை யாக நிறைவேறவில்லை. எனவே இடஒதுக்கீடு நீடிக்கவேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப் பாடு. ஏழைகள், தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோரின் நலன்கள் பாதுகாக்கப்படும். மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது பாஜகவில்தான் எஸ்சி, எஸ்டி, ஓபிசி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அதிகமாக உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...