தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா

காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் துணை ராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்ததாக்குதலுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆவேசமாக அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் நாடாளுமன்ற நூலக வளாகத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு, அனைத்துகட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட பலகட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த றகு எதிர்க் கட்சிகளின் ஆலோசனைகளை பெறுவதற்காக நடத்தப்படும், முதலாவது, அனைத்துகட்சி கூட்டம் இதுதான் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் ஊரிபகுதியில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம், துல்லியதாக்குதல் நடத்தியது.

தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் அனைத்துகட்சி தலைவர்களை அழைத்து மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. ஆனால் முதல் முறையாக, அனைத்து கட்சிகளின் ஆலோசனையை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியை மோடி அரசு இப்போது எடுத்துள்ளது. பாகிஸ்தானிற்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு எதிராகவும் எந்தமாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று, அனைத்து பாதுகாப்பு படைத் தலைவர்கள் மற்றும் உளவுத்துறை அமைப்பின் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது எந்த ஒரு நடவடிக்கைக்கும் தயாராக இருக்க வேண்டும்..எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) ஜம்மு காஷ்மீர் எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லையில் கூடுதல் படைகளை குவித்து வைக்கும்படியும் அஜித் தோவல் அப்போது அறிவுறுத்தி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியும் இன்று காலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது இது இந்தியா முழு அளவிலான தாக்குதலுக்கு தயாராவதையே காட்டுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...