ஊழல்வாதிகளுக்கு ஒரு சிறுவாய்ப்பு கொடுத்தாலும், நமதுநாட்டை பழைய நிலைக்கு கொண்டு சென்று விடுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மீரட் தேர்தல்பிரச்சாரத்தில் இன்று எச்சரித்தார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்நகரில் இன்று மதியம் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றினார். மிஷன் சக்தி திட்டத்தின் வெற்றிக்கு பிறகு நடைபெற்ற, முதல்கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது: ஒவ்வொரு குடிமக்களுக்கும் வங்கிகணக்கு துவங்கியபோது, யாரெல்லாம் கேலி பேசினார்களோ, அவர்கள் இப்போது, அதேவங்கி கணக்கில் பணம் செலுத்துகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். பாஜக அரசு இப்படி அனைவருக்கும் வங்கிகணக்கை துவங்கியிருக்கா விட்டால் பணம் எப்படி செலுத்தமுடியும்.
வங்கி கணக்கு துவங்கியது முந்தைய ஆட்சிகளை போல இடைத்தரகர்கள் சாப்பிட்டுவிட கூடாது என்பதற்காகத்தான். இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும், மோடி அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். 5 வருடங்கள் முன்பாக நான் உங்கள் ஆசியை நாடிவந்தேன். எனக்கு நிறைய அன்பை கொட்டிக் கொடுத்தீர்கள். வரும் லோக் சபா தேர்தல் மக்களின் எதிர்பார்ப்பு, கனவுகளை பூர்த்திசெய்ய உதவும் தேர்தல் என்பதை மறக்காதீர்கள்.
இந்தியாவில் முதல்முறையாக 2.5 கோடி குடும்பங்கள் மின் இணைப்பை பெற்றுள்ளனர். ஊழல்வாதிகள் மீண்டும் சிறுவாய்ப்பு கிடைத்தாலும், இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துச் சென்று விடுவார்கள். அவர்களுக்கு சிறுவாய்ப்பும் கொடுத்துவிடாதீர்கள்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.