ஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ?

இந்தியாவை துண்டாட நினைப்போருக்கும், அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கும், காங்கிரஸ் கட்சி, பட்டாடை போர்த்தி, வரவேற்புஅளிக்கும் என, தன்தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது, ‘தேசத்துரோகச் சட்டமான, 124 – ஏ சட்டப் பிரிவு நீக்கப்படும்’ என, காங்கிரஸ் அறிவித்து, இந்தியாவிற்கு, அபாயமணி அடித்துள்ளது.

என்ன சாதித்தது?பிரிவினை வாதிகளுடன் கைகோர்த்தாவது, ஆட்சியை மீண்டும் கைப்பற்ற, காங்கிரஸ் துடிக்கிறது. ஆட்சி அதிகாரம் மட்டும்தான், அக்கட்சிக்கு முக்கியமா, தேசத்தின் நலன் தேவையில்லையா?இந்தியாவை, இத்தனை ஆண்டுகாலம், காங்கிரஸ் ஆண்டதே… என்ன சாதித்தது?

வீட்டு வாசலில் படுத்துக் கிடப்போருக்கு, வேண்டிய அமைச்சர் பதவிகள் தருவது; எங்கும் நீக்கமற, ஊழல் செய்வது; அத்துமீறும் அண்டை நாடுகளிடம் பணிந்து, சமாதானம்பேசுவது போன்றவை தவிர, காங்கிரஸ் என்ன செய்தது?காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஊழல் புகாரில் சிக்கியோர்மீது, வித்தியாசமாக நடவடிக்கை எடுப்பர்… அதாவது, ஊழல் குற்றம் சாட்டப் பட்டோருக்கு, உயர் பதவி கொடுக்கப்படும்.நேருகாலத்து, கிருஷ்ணன் மேனன் முதல், சோனியா காலத்து, ப.சிதம்பரம் வரை, அதற்கு, பல உதாரணங்களை காட்டமுடியும்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட, தாமஸ் என்பவரை, ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவராக, நியமனம்செய்த, ‘தில்லாலங்கடி’ கட்சிதானே, காங்கிரஸ்!’2ஜி, நிலக்கரி ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, எம்.பி.,க்களுக்கு லஞ்சம், ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு’ என, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல், அனுமன் வாலைவிட, மிக நீண்டது!.

பிரிவினை வாதிகள்’இந்தியா முன்னேறவில்லை’ என, இன்று, காங்கிரஸ் முழக்கமிட்டால், அதில் முதல் குற்றவாளி, அக்கட்சி தானே!தற்போதைய, பா.ஜ., அரசுமீது, ஊழல் குற்றசாட்டுகளையோ, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்ற எந்த காரணத்தையும், காங்கிரஸ் கூட்டணி கட்சியினரால், முன்வைக்க முடிய வில்லை.’எதை தின்றால் பித்தம்தெளியும்’ என்பது போல, ஆட்சி அதிகாரம் பெறவேண்டும் என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு, காங்கிரஸ் வந்துவிட்டது.

இந்த தேர்தலில், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் துணையோடு, இந்தியாவை ஆட்சிசெய்ய வேண்டும் என, காங்கிரஸ் விரும்புவது, அப்பட்மாக தெரிகிறது. அதனால்தான், ‘தேசவிரோதச் சட்டத்தை நீக்குவோம்’ என, தேர்தல் அறிக்கை கொடுத்து உள்ளது.என்ன காரணத்திற்காக, இந்தசட்டத்தை நீக்குவோம் என, காங்., அறிவிக்கிறது? இதனால், இந்த தேசத்திற்கு ஏற்படும் நன்மை என்ன?மத்திய நிதிஅமைச்சர், அருண் ஜெட்லி, ‘காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள், நாட்டுக்கே ஆபத்தானவை. ‘பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் விரும்பும்வகையில், அவை உள்ளன. தகுதியற்றோர், தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்’ என்றார்.

அது உண்மை தானே!ஆங்கிலேய ஆட்சியில், இந்தியாவில், தேச துரோகசட்டம் இயற்றப்பட்டது. அவர்களுக்கு எதிராக போராடுவோர் மீது, இச்சட்டம் பாய்ந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பின், பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தது.இனி, இந்தியாவிற்கு என்றே, தன சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சூழலில், ஒடுக்கப்பட்டோருக்காக பாடுபட்ட, அம்பேத்கர் தலைமையில், இந்திய சட்டஅமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போதைய பிரதமர்,நேரு உள்ளிட்டோரின் கொள்கைக்கு எதிராக இருந்த அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை வரையறுத்தார். அவர் நினைத்திருந்தால், தேசத்துரோக சட்டத்தை நீக்கியிருக்கலாம்; ஏன், நீக்கவில்லை?

 

இந்தியா, ஒன்றுபட்ட தேசமாக, வலிமையான நாடாக உருப்பெற வேண்டுமானால், பிரிவினை வாதிகளுக்கு, சலுகை காட்டக் கூடாது; எந்த மாநிலமும், தனிநாடு கோரக் கூடாது என்பதில், அவர் உறுதியாக இருந்தார்.தற்போதுள்ள, இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு – 124, -ஏ, தேசத்தின் ஒற்றுமைக்கு, பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது. இச்சட்டம் இல்லையென்றால், பிரிவினை வாதிகளுக்கு துளிர்விட்டு போகும்.

‘இந்தியாவில், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசிற்கு எதிராக, பேச்சு, எழுத்து, அறிகுறி, மற்ற முறைகளில், வெறுப்பை உருவாக்குவோர் அல்லது முயற்சிப்போர், வாழ்நாள் முழுவதும் அல்லது மூன்று ஆண்டு சிறைவிதித்து, தண்டிக்கப்பட வேண்டும்’ என, அந்த சட்டம் கூறுகிறது.’இந்த தேசத்தின் பிரிவினைக்கு எதிரான சட்டத்தை நீக்குவோம்’ என, காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதாவது, ‘இந்தியாவை துண்டாக்குவோர் மீது, நடவடிக்கை எடுக்கப் படாது’ என, மறைமுகமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

‘அடைந்தால் திராவிடநாடு; இல்லையென்றால் சுடுகாடு’ என்ற கோரிக்கை, சுதந்திரத்திற்கு பின், தி.மு.க.,வால், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது; ஆங்காங்கு, போராட்டங்களும் நடந்தன.கடந்த, 1962ல், இந்தியா மீது, சீனா படையெடுத்ததை காரணம் காட்டி, அப்போதைய, தி.மு.க., பொதுச்செயலராக இருந்த அண்ணாதுரை, தனி நாடு கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார். உண்மையில், தேசத் துரோகச் சட்டம் காரணமாகத் தான், இக்கோரிக்கையை, தி.மு.க., கைவிட்டது!

தற்போது, காங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்குவந்தால், இந்தியாவில் இருந்து, எந்த மாநிலத்தையும், தனிநாடாக பிரிக்ககோரி, போராட்டம் நடத்தலாம். சட்டப்படி, யார் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது. இந்திய இறையாண்மை மீது, நேரடியாக தாக்குதல் நடக்கும்.நாடு முழுவதும், பகிரங்கமாக, பயங்கரவாத செயல்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தனிநாடு கோருவோர், தெருகூட்டங்கள் போட்டு, அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்வர்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது, ரத்த ஆறு ஓடியதே… அதேபோன்று, தேசமெங்கும் நிகழும்.இந்தியாவை நாசப்படுத்த வேண்டும் என்ற பயங்கரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளின் எண்ணம், தடையில்லாமல் ஈடேறும்.காங்கிரஸ் தலைவர்கள்,இந்த சட்டத்தை நீக்குவதாக, எதற்காக, யாருக்காக வாக்குறுதி அளித்தனர்? பயங்கரவாதிகளின் கைக்கூலியா,
காங்கிரஸ் கட்சி?

காங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்குவந்து, தேசத்துரோகச் சட்டத்தை நீக்கினால், இந்ததேசம், பல்வேறு துண்டுகளாக பிரியும்.இந்த தேசத்தில் ரத்த ஆறு ஓடுவதை, இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; அதற்கு, காங்கிரஸ் என்ற கட்சியே, இந்தியாவில் இருக்க கூடாது!.

சி.கலாதம்பி

சமூக ஆர்வலர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் ​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரல ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் -ஜிதேந்திர சிங் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் பொறுப்பு வாங்க தேசத்துக்கு உள்ளது – ஜெய் சங்கர் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்ககுலைந்து கிடக்கிறது – அண்ணாமலை கவலை தமிழகத்தில், வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ...

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தே ...

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு புதிய நம்பிக்கையை தருகிறது – பிரதமர் மோடி பெருமிதம் '' மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் ...

ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும ...

ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும் – வங்கதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல் வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...