யார் இந்த அன்னபூர்ணா சுக்லா?

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழுகட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி யிடுகிறார்.  இதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல்செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஏப்ரல் 25-ம் தேதிதான் போட்டியிடும் தொகுதியில் மிகப் பெரும் பேரணி நடத்தினார் பிரதமர் மோடி. வாரணாசியில் தனக்குள்ள செல்வாக்கை காட்டுவதற்காகப் பேரணி நடத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது. இந்த மெகாபேரணியில் பாஜக தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், கூட்டணிக் கட்சி தலைவர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்ற ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து நேற்று பெரும்படையை திரட்டிச் சென்று வேட்பு மனுத் தாக்கல்செய்தார் மோடி. அதற்கு முன்னதாக தன் வேட்புமனுவைப் பெண் ஒருவரிடம் அளித்து அவரின் காலில் விழுந்து வணங்கினார். பிரதமர் காலில் விழுந்துவணங்கிய அந்தப் பெண் யார் என்ற கேள்வி நேற்று முதல் சமூகவலைதளங்களைச் சுற்றி வருகிறது. தற்போது அவரை பற்றியதகவல்கள் வெளிவந்துள்ளன.

 

அன்னபூர்ணா சுக்லா என்ற 91 வயதான கல்வியாளரிடம்தான் மோடி ஆசிபெற்றார். வாரணாசியில் மோடி போட்டியிடுவதற்கு முன் மொழிந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவருமான பண்டிட் மதன்மோகன் மால்வியாவின் வளர்ப்பு மகள். அன்னபூர்ணா நாற்பது ஆண்டுகளாகக் காசியில் உள்ள ஒருகல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது அவருக்கு 91 வயது ஆனபோதிலும் சமூகப் பணிகளை மிகவும் ஆர்வமாகச் செய்து வருகிறார்.

இதுபற்றி இந்தியா டுடே பத்திரிகைக்கு அன்னபூர்ணா அளித்துள்ள பேட்டியில்,  “நான் ஒருதாயை போலத்தான் மோடியை ஆசீர்வாதம் செய்தேன். அவர் உணர்ச்சிவசப் பட்டார். பின்னர் என் காலில் விழுந்தார். கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடி நிறையபணிகளை செய்துள்ளார். வாரணாசியில் இருந்த போக்குவரத்து சீரமைக்கப் பட்டுள்ளது. சாலைகள் அகலப்படுத்த பட்டுள்ளன. அவரின் வளர்ச்சிப் பணி தொடர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

One response to “யார் இந்த அன்னபூர்ணா சுக்லா?”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...