தேசத்துக்கு எதிரான அனைத்துசக்திகளும் சிறைக்கு தள்ளப்படுவது உறுதி

ராகுலைப்போல சிலமாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை தேவைப்படாமல், அயராது மக்கள்பணியில் ஈடுபட்டு வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய  தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தில் உள்ள சீதாமரி-சரன் லோக் சபா தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு  அமித் ஷா பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் வித்தியாசம் உண்டு.  ராகுலுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட சிலமாத இடைவெளியிலும் விடுமுறை தேவைப்படுகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக அயராது தொடர்ந்து மக்கள்பணியில் ஈடுபட்டு வருகிறார் மோடி.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் ஆட்சியில் இருந்தபோது முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வுகாண  உருப்படியான நடவடிக்கைகள் எதையும் எடுத்ததில்லை. குறிப்பாக, பயங்கர வாதத்துக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொள்ள வில்லை. மேலும், பின் தங்கிய வகுப்பினர் மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவில் உள்ள ஏழைகளுக்கு ஆதரவான எந்தஉறுதியான நடவடிக்கையையும் காங்கிரஸ்கட்சி மேற்கொள்ளவில்லை.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவவீரர் லான்ஸ் நாயக் ஹெம்ராஜை பாகிஸ்தான் ராணுவம் தலையை துண்டித்துகொன்றது.  இது சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு இதற்கு போதுமான பதிலடி நடவடிக்கைகளை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. ஆனால், பாஜகஆட்சியில் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது, துல்லியத்தாக்குதல்  மூலமாக தகுந்த பதிலடி தரப்பட்டது.

அதேபோன்று, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, 56- அங்குல மார்பளவை கொண்ட நமது பிரதமர் வான் வழிமூலம் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பயங்கரவாதமுகாம்களை அழித்துக்காட்டினார். பாஜக ஆட்சியில் தேசத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் சிறைக்குபின்னால் தள்ளப்படுவது உறுதி என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...