கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி  உடல்நலக்குறைவு காரணமாக   எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது  66வது வயதில் மரணமடைந்துள்ளார். .

1952ம் ஆண்டு பிறந்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் மற்றும் சோனாலி என்ற பிள்ளைகளும் உள்ளனர். சிறு வயதினிலே சமூகத்தின் மீது  கொண்ட பற்றால் மாணவ அமைப்பான அகில இந்திய வித்யாதி  பாரிசத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். இந்திராகாந்தியின் எமெர்ஜென்சியை தீரத்துடன் எதிர்கொண்டு சிறை வாசம் கண்டவர்.

1980 ம் ஆண்டு பாஜகவின் இளைஞர் அணியில்  தனது அரசியல் கணக்கை தொடங்கினர். பாஜகவின் தேசிய செயற்குழு, தேசிய பொதுச் செயலாளர், கட்சியின் செய்தித் தொடர்பார் ,முக்கிய முடிவுகளை எடுக்கும், ஒரு சிலர்களை மட்டுமே உள்ளடக்கிய, உயர்மட்ட குழுவில் முக்கியமானவர் என பாஜக.,வின் முக்கிய கட்டமைப்புகளில் ஒருவராகவே ஆகிப்போனவர்.

அதே போன்று தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம்பயின்று . வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கிய அருண் ஜேட்லி, இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மத்திய அரசின் வழக்குரைஞராக பதவி வகித்தவர் என்ற பெருமையை வி.பி. சிங் ஆட்சிகாலத்தில் பெற்றவர்.

1999ம் ஆண்டு பாஜக.,வின்  வாஜ்பாய் அரசில்  , சட்டத்துறை அமைச்சராகவும், மத்திய வர்த்தகத்துறை .தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும், 2014ம் ஆண்டைய மோடி அரசில் நிதி அமைச்சராகம் பின்னர் . சில காலம் பாதுகாப்பு துறையையும் சேர்த்து கவனித்தார்.

கருப்பு பணம் ஒழிப்பு, ஜி.எஸ்.டி போன்ற கடினமான விஷயங்களை மிகவும் திறம்பட கையாண்டார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் போலி குற்றச்சாட்டுகளை தனது சமயோகிதமான பதில்களின் மூலம் நீர்த்து போகச் செய்தவர். சிறந்த கட்டுரையாளர். எத்தகைய கடினமான விஷயங்களையும் சித்தாந்தம் பிசகாமல் கட்டுரை வடிவில் ஆழமாக விவாதிக்க கூடியவர்.

சிக்கலான கால கட்டத்தில் பாரதிய ஜனதா பேரியக்கத்தை தாங்கிபிடித்த முக்கிய தூண்.  2002ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் எனக்கவுண்டர் வழக்கு உள்ளிட்டவற்றில் நரேந்திர மோடி மற்றும் அமித்ஸாவின் நியாயமான குரலை நீதிமன்றத்திலும், ஊடகங்களிலிலும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்ததாகட்டும், . 2014ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே சிறந்த தேர்வு என்று வலியுறுத்தியதாகட்டும், அன்றைக்கு கட்சிக்குள் உருவான சல சலப்பை சரிசெய்து நரேந்திர மோடி தேர்தலில் வெற்றிபெற்று பாரத பிரதமராக முடிசூட கடைசி வரை உறுதுணையாக இருந்ததாகட்டும், ஜெயலலிதாவுடன் கொண்ட  நட்பால் ஆரம்ப காலத்தில் பாஜக.,வின் ஆதரவு குரலாக அவரை மாற்றியதாகட்டும்,  பிஹாரில் நிதிஸ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணியில்  மீண்டும் கொண்டுவந்து கூட்டணியை பலப்படுத்தியதாகட்டும் என்று கூறிக்கொண்டே செல்லலாம். குறிப்பாக இவரது இழப்பு பாஜக கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...