100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நேற்று (15.6.2024) இணை அமைச்சர்கள்   ராம்தாஸ் அத்வாலே மற்றும்   பி.எல் வர்மா ஆகியோருடன் ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார் . அடுத்த 100 நாட்களுக்கான துறையின் முக்கிய முயற்சிகளில் உத்திகளை அவர் வகுத்தார்.

இந்தக் கூட்டத்தில், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகத்தின் (அலிம்கோ) நவீனமயமாக்கல் முயற்சிகளைத் தொடர்ந்து, துறையின் முன்முயற்சிகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை  செயலாளர்  ராஜேஷ் அகர்வால் விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர், இந்திய மறுவாழ்வு கவுன்சில், தேசிய நிறுவனங்கள், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்  ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் துறையின் பரவல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர்.  சாதனைகளை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்கான துறையின் உறுதிப்பாட்டை இந்த ஆலோசனைக் கூட்டம் வெளிப்படுத்தியது.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவ சமுதாயத்தை வளர்ப்பதில் இந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் வலியுறுத்தினார். “சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கத்தை ஆதரிக்கும் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதில் அரசின்  கவனம் உள்ளது. அலிம்கோவின் நவீனமயமாக்கல் மற்றும் நமது  பல்வேறு அமைப்புகளின் சாதனைகள் இந்த இலக்கை நோக்கிய நமது  அர்ப்பணிப்புக்கு சான்றாகும்’’ என்று அவர் கூறினார்.

இணையமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு பி.எல்.வர்மா ஆகியோர் இந்த உணர்வுகளை ஆமோதித்து, இந்த முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான கூட்டு முயற்சிகளை எடுத்துரைத்தனர். செயலாளர்  ராஜேஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரிகள், உரிய நேரத்தில் மற்றும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் விரிவான திட்டங்களை வழங்கினர்.

எதிர்கால முன்னேற்றங்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து, கோடிட்டுக் காட்டப்பட்ட இலக்குகளை அடைய அடுத்த 100 நாட்களில் அயராது உழைக்கும் அரசின் ஒருமித்த உறுதிப்பாட்டுடன் கூட்டம் நிறைவடைந்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...