பசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாதாரம் நீடிக்க முடியுமா?

பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரபிரதேச மாநிலம் மதுரா சென்றார். அங்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடு திட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் நிதியுதவியுடன் 12 ஆயிரத்து 652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் நாடுமுழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. கால்நடைகளுக்கு கால் மற்றும் வாயில் ஏற்படும் நோய்களை ஒழிப்பதே இத்திட்டம். இதன்படி, கால்நடைகளுக்கு தடுப்பூசிபோடப்படும்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும் போது, இப்போது சிலருக்கு ஓம், பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே, ஏதோ 16ம், 17ம் நூற்றாண்டுக்கு போய்விடுவது போலவும், நாட்டை சீரழிப்பது போலவும் தோன்றுகிறது. நான் ஆப்பிரிக்காவில் ருவாண்டா நாட்டிற்கு போயிருந்தேன். அங்கே ஒருதனித்துவமான திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். அதாவது, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருபசு கொடுக்கிறார்கள். அந்த பசு ஒரு பெண்கன்று ஈன்றதும் அதை அரசாங்கமே பெற்று வேறொரு குடும்பத்திற்கு கொடுக்கிறார்கள். எல்லா வீட்டிலும் பசுவளர்க்கப்பட வேண்டும் என்பதே திட்டம். நமது நாட்டிலும் பசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாதாரம் நீடிக்க முடியுமா? இதை நாம் சிந்திக்க வேண்டும் .

அந்த விழாவுக்கு பின்பு, பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்தெடுக்கும் பெண் தொழிலாளர்களுடன் அமர்ந்து அவர்களின் பணியை பார்வையிட்டு உரையாடினார்.
அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை பொது மக்கள் கைவிட வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, கால்நடைகள், மீன்கள் ஆகியவற்றுக்கும் பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி. மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசுகையில், நாடுமுழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மலிவான பைகளை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி இன்று ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சிக்கு செல்கிறார். அங்கு புதியசட்டசபை கட்டிடத்தை திறந்துவைக்க உள்ளார். அத்துடன், விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தையும், சுயதொழில் புரிவோருக்கான ஓய்வூதிய திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...