தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா

தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம், நான்குமருத்துவ சாதனங்கள் பூங்காவை அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதிவழங்கி உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும், உலக தரத்திலான மருத்துவ வசதி குறைந்த விலையில் கிடைப்பதற்கு உதவும் வகையிலும், இந்த பூங்காக்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆலைகளை எளிதில் அமைத்து, உற்பத்தியில் ஈடுபடும்வகையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்தபூங்காக்கள் அமைக்கப்படும்.

இந்த பூங்காக்களில் ஆலைகள் அமைக்கப் படுவதால், தரமான மருத்துவ சோதனைவசதிகள் குறைந்த விலையில் கிடைக்கவும் உதவுவதாக இருக்கும். நாட்டில் மருத்துவ சாதனங்களுக்கான சில்லரைசந்தை, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். இதன் உலக சந்தை மதிப்பு சுமார் 15 லட்சம் கோடியாகும்.

இதில் இந்தியா மிகச்சிறிய பங்கு கூட வகிக்கவில்லை, மருத்துவ உபகரணம் இறக்குமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதைப்போன்ற உற்பத்தி பூங்காவை அமைப்பதன் மூலம் மருத்துவ உபகரண உற்பத்தியை எளிமை படுத்தலாம். பல சிறு நிறுவனங்கள் குறைவான செலவில் ஆராய்ச்சி மற்றும் விற்பனை பணிகளில் ஈடுபடுவது எளிதாகும். இந்தியாவில் போதுமான அறிவுசார் மனித சக்தி கொட்டிக் கிடப்பதால்  இந்தியா உலகுக்கே மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் வல்லமையை பெரும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...