நாடுமுழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடித்து வருவதற்கும், கரோனா எதிர்ப்பு களத்தில் போராடும் சுகாதாரத்துறை பணியாளர்களை பாராட்டும் வகையில் 5 மணியளவில் ஆங்காங்கே இருந்து ஒசை எழுப்பியதற்கு மக்களுக்கு பிரதமர்மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகநாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதிவரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்க தடைவிதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும் இன்று மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நாட்டின் பலபகுதிகளிலும் பிரதமர் மோடி அறிவித்தபடி கரோனா எதிர்ப்பு களத்தில் போராடும் சுகாதாரத்துறை பணியாளர்களை பாராட்டும் வகையில் 5 மணியளவில் ஆங்காங்கே இருந்து ஒசை எழுப்பி தங்கள்ஆதரவை தெரிவித்தனர்.
இதுபற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தி்ல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளதாவது:
‘‘மக்கள் ஊரடங்கு; கரோனாவைரஸ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த நாடு நன்றிதெரிவிக்கிறது. கொடிய நோயை எதிர்த்து போராடும் நீண்டநெடிய போாராட்த்தில் நமக்கு கிடைத்த முதல் வெற்றி இது’’ எனக் கூறியுள்ளார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |