22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்

காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த 22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தெரிவித்தார்.

“எங்கள் 22 எம்.எல்.ஏக்கள் இன்று கட்சித்தலைவர் ஜே.பி.நட்டாவின் ஆசீர்வாதத்துடன் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகிடைக்கும். அவர் எங்களை ஊக்குவித்து அனைவரின் மரியாதையும் பேணப்படும் என்று உறுதியளித்தார்.” என்று சிந்தியா செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆறு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட மத்தியபிரதேசத முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பாஜக தலைவர் ஜே .பி.நட்டாவின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கட்சித்தலைவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் இந்தஇணைப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சனிக்கிழமை, மத்திய பிரதேச சட்டமன்ற சபாநாயகர் என்.பி. பிரஜாபதி, காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படும் ஆறு அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அனைத்து கிளர்ச்சி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

இந்த உறுப்பினர்களில் இமார்டி தேவி, துளசிசிலாவத், பிரதியுமான்சிங் தோமர், மகேந்திர சிங் சிசோடியா, கோவிந்த் சிங் ராஜ்புத் மற்றும் பிரபுரம் சவுத்ரி ஆகியோர் அடங்குவர். அவர்கள் அனைவரும் கமல்நாத் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள்.

கமல்நாத் மத்தியபிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், பாஜகவின் மூத்த தலைவர் சிவ்ராஜ்சிங் சவுகான், வெள்ளிக்கிழமை தனது கட்சி மாநில அரசை அமைப்பதற்கோ அல்லது கவிழ்ப்பதற்கோ முயற்சி செய்யவில்லை என்று கூறியதுடன், காங்கிரஸை சுயஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்..

தனது இராஜிநாமாவை வழங்கிய பின்னர், கமல்நாத், மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஜனநாயக கொள்கைகளை பலவீனபடுத்துவதில் ஒருபுதிய அத்தியாயத்தை சேர்க்கிறது என்று கூறினார். வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக போபாலில் ஒருசெய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரசின் முக்கிய முகமான ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்ததை அடுத்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...