கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள்

கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தியநிலையில்,கடந்த 6ம் தேதி 3 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிபயணம் மேற்கொண்டார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது, கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் பிரதமர்மோடியின் சித்தாந்தத்தையும், தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய, எந்த தலைவர்களாக இருந்தாலும் பாஜகவில் இணையலாம். இணைந்த அனைத்துதலைவர்களும் தேசியம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ளனர்.

ஒரு அரசியல்கட்சியில் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. அது நடக்கட்டும் பதில் கூறுகிறேன் என தெரிவித்தார். அரசியலில் ஒருஇடத்தில் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. மக்களுக்கு சேவைசெய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது. பாஜகவில் யாருவந்தாலும் மகிழ்ச்சிதான். முக்கியமாக பாஜகவின் சித்தாந்த அடிப்படையில் வரவேண்டும் என கூறினார்.

இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திடீரென இன்று விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.

மேகதாது விவகாரம்தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, மேகதாது விவகாரம் முடிந்து விட்டது என்றும் மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அணைகட்ட முடியாது என்பதை மத்திய அரசு தெளிவுப் படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

One response to “கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...