நிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா?

தமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ஆக மெல்ல உயர்ந்திருந்தது.

இந்நிலையில்தான், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்,நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில்  அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

தமிழகத்தில்  மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது என்ற அவரது அந்தஅறிவிப்பு, ஏற்கெனவே கொரோனா பீதியின் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள பொது மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்துடன், புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள 50 பேரில், 45 பேர் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் என்றசெய்தி, பொதுமக்களுக்கு இடியாய் இறங்கியுள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,500 பேரில், 1,130 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களில் 515 பேர்மட்டுமே அடையாளம் காணப் பட்டுள்ளனர் என்ற சுகாதாரத்துறை செயலாளரின் தகவல் மக்களுக்கு இன்னொரு இடியாக இறங்கியுள்ளது.

இப்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒரேநாளில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்த மாநாடு குறித்தும், இந்த மாநாடு கொரோனா வைரஸ்பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஏற்படுத்தியுள்ள எதிர்மறை தாக்கம் குறித்தும் இங்கு காண்போம்…

மார்ச் 13: மதரீதியான சர்வதேசமாநாட்டுக்காக ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 3,400 பேர் டெல்ல நிஜாமுதீன் மார்கஸ் எனுமிடத்தில் ஒன்றாக கூடினர்.

மார்ச் 16: டெல்லியில் மார்ச் 31 ஆம் தேதிவரை மதரீதியான, சமூக நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக்கூடாதென டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவு

மார்ச் 20: டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தெலங்கானா சென்ற 10 இந்தோனேசியர்களுக்கு கொரோனா  உறுதி.

மார்ச் 22: பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தப்படி, கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிப்பு

மார்ச் 23: டெல்லி, மதரீதியான மாநாட்டில் பங்கேற்ற 1,500 பேர் மாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறினர்.

மார்ச் 24: பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிப்பு

மார்ச் 25: டெல்லிமாநாட்டில் பங்கேற்றவர்கள் 1,000 பேர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திலேயே முடக்கம்

மார்ச் 26: கொரோனா தொற்றுக்கு ஆளான மத போதகர் ஜம்மு -காஷ்மீர் மாநிலம்,ஸ்ரீநகரில் மரணம்.

மார்ச் 28: உலகசுகாதார நிறுவன அதிகாரிகள் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டு இடத்துக்கு வருகை. அவர்களின் பரிந்துரையின் பெயரில் அங்கு தங்கியிருந்த வர்களில் 33 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்..

மார்ச் 29: அரசின் எச்சரிக்கையையும்மீறி மாநாட்டு இடத்தில் தொடர்ந்து தங்கியிருந்த அனைவரும் டெல்லி போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தபட்டனர்.

மார்ச் 31: மதரீதியான மாநாட்டுக்கு ஏற்பாடுசெய்த அமைப்பின் நிர்வாகிகள் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைசேர்ந்த 50 பேர், டெல்லியை சேர்ந்த 24 பேர் உள்பட மொத்தம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 84 பேருக்கு தற்போது கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. மேலும், இந்தமாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த 824 பேர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், கொரோனா வைரசின் மூன்றாம் நிலையான சமூகபரவலுக்கு இம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் முக்கிய காரணமாக அமைந்துவிடுவார்களோ என்ற அச்சம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. மேலும் இதில் ஏதேனும் சதிவலைகள் பின்னப் பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடற்படையின் தயார்நிலை குறித்த ...

கடற்படையின் தயார்நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 14, ...

குவைத் தீ விபத்து இந்தியர் உடல ...

குவைத்  தீ விபத்து இந்தியர் உடல்களுடன் சிறப்பு விமானம் கொச்சி வந்தடைந்தது சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர ப ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர பிரதானின் கருத்து மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக ...

குவைத் தீ விபத்து-மோடி ஆலோசனை

குவைத்  தீ விபத்து-மோடி ஆலோசனை குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி அமைக்கும் பாஜக ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்ட ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் முதல்வராக பெமாகாண்டு தொடா்ந்து 3-வது ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...