மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற கட்சிகளின் கட்சிக்கூட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் இன்று ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேசினார்.
தயாளு அம்மையாரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடியிடம் அவரது நலன்குறித்து ஸ்டாலின் கேட்டார். அப்போது, ஏப்ரல் 8 ஆம் தேதிநடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டிஆர்.பாலு பங்கேற்பார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் மத்தியஅரசு ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்கவேண்டும். நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய அரசுக்கு ஆக்கப் பூர்வ ஆலோசனையை திமுக தரும் எனவும் பிரதமர் மோடியிடம் முக.ஸ்டாலின் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஸ்டாலினை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவா்களுடன் பிரதமா் நரேந்திரமோடி வரும் 8-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாட இருக்கிறாா்.
இந்தக்கூட்டத்தில் திமுக சார்பில் டிஆர்.பாலு பங்கேற்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |