மருந்துகளை அனுப்பிய எனது அருமை நண்பருக்கு நன்றி

உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இஸ்ரேலிலும் பரவிவருகிறது. அந்நாட்டில் 9 ஆயிரத்து 968 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவில் மலேரியா நோய்க்கு தடுப்புமருந்தாக பயன்படுத்தப்பட்டுவரும்  ஹைட்ரோக்சி குளோரோகுயின் எனப்படும் மருந்து கொரோனா வைரசை ஆரம்பநிலையில் கட்டுப்படுத்துவதில் முக்கியபங்கு வகிக்கிறது.
இதனால், இந்த வகை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்ய மத்திய அரசு தடைவிதித்தது.
இருப்பினும் உயிர் காக்கும் மருந்து என்பதால் உலக நாடுகளின் தேவையை உணர்ந்து இந்தியா ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய விதித்த தடையை நீக்கியது.
இதற்கிடையே, குளோரோகுயின் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை  இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்புமாறு அந்நாட்டுபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, ஏற்றுமதிக்கு விதிக்கப் பட்ட தடை நீக்கப்பட்டதால் இஸ்ரேல் நாட்டிற்கு குளோரோகுயின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தமருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நேற்று இஸ்ரேலை சென்றடைந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெதன்யாகு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மருந்துகளை அனுப்பிய எனது அருமைநண்பர் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி. இஸ்ரேல் நாட்டின் அனைத்து குடிமக்கள் சார்பாகவும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...