மருந்து கட்டுப்பாடு நடைமுறைகளை மாற்ற வேண்டும்

மருந்து கட்டுப்பாடு நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாதவகையில் உள்ளன. கடினமான அந்த நடைமுறைகளை மாற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. இதில் சிலமருந்துகள் சோதனை நிலையை எட்டியுள்ளன.

இந்நிலையில், கரோனா வைர ஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது என்பதுகுறித்து பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது, “கரோனா வைர ஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள், மருந்து நிறுவனங்கள், மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல் படுகின்றன. முத்தரப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியில் உலகின் தலைசிறந்த நாடு இந்தியா என்பதை நாம் நிரூபிக்கவேண்டும்” என்று கேட்டு கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைசெயலாளர் பி.கே.மிஸ்ரா, முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன், ஆலோசகர் அமர்ஜித் சின்ஹா, பயோ தொழில்நுட்ப துறை செயலாளர் ரேணு ஸ்வரூப், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பலராம் பார்கவா, சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கரோனா வைரஸுக்கு மருந்துகண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர்  புகழாரம் சூட்டினார். அதேநேரம் மருந்து கட்டுப்பாடு நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாதவகையில் உள்ளன. கடினமான அந்த நடைமுறைகளை மாற்றவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் புதியமருந்துகளை அவசரகால அடிப்படையில் சோதனைசெய்ய அந்தநாட்டு சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் இந்தியாவில் புதிய மருந்துகளை விலங்குகளுக்கு அளித்து சோதனை நடத்துவதற்குக்கூட பல மாதங்கள் ஆகின்றன.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ‘ரெமிடெசிவிர்’ மருந்து நல்லபலன் அளிப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்தமருந்து மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் நமது சிவப்புநாடா நடைமுறைகளால் இந்த மருந்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே காலத்துக்கு ஏற்றவகையில் இந்திய மருந்து கட்டுப்பாடு நடைமுறைகளில் மாற்றங்களை செய்ய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...