கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கம் தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை, நிதிஅமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக, கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கபட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதிஅமைச்சகம், ரூ. 6,195 கோடியை ஒதுக்கீடுசெய்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கபட்டுள்ளது. பஞ்சாப்புக்கு ரூ.638 கோடி, மேற்குவங்கத்திற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 335.41 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. குறைந்த பட்சமாக மேகாலயாவிற்கு ரூ.40 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கொரோனா நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகளுக்கு உதவும்வகையில், 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி, 2-வது தவணையாக, 14 மாநிலங்களுக்கு ரூ .6,195.08 கோடி வழங்கபட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |