பொதுமுடக்கம் அமலால் 29 லட்சம் போ்வரை பாதுகாக்க பட்டுள்ளனர்

நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டதால், சுமாா் 14 லட்சம் முதல் 29 லட்சம் போ்வரை கரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனா். சுமாா் 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தவிா்க்கப் பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, நீதி ஆயோக் உறுப்பினரும் (சுகாதாரம்), கரோனா சூழலை எதிா் கொள்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலை குழுவின் தலைவருமான வி.கே.பால், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை செயலா் பிரவீண் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா், தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக் கிழமை பேட்டியளித்தனா்.

அப்போது, வி.கே.பால் கூறியதாவது: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க சரியானநேரத்தில், செயல்திறனுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கரோனாவுக்கு எதிரான போரில், பொதுமுடக்கம் மிகச் சிறந்த பலனை தந்துள்ளது.

பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், நாட்டில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை மிகஅதிகமாக இருந்திருக்கும். பொதுமுடக்கம் தொடங்கியபோது, பாதிப்பு இரட்டிப்பாகும் நாள்களின் எண்ணிக்கை 3.4-ஆக இருந்தது. தற்போது இது 13.3 நாள்களாக அதிகரித்துள்ளது. இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவோரில் 80 சதவீதம் போ் 5 மாநிலங்களில்தான் உள்ளனா். எனவே, நாட்டில் கரோனா நோய்த்தொற்று வெகுவாக கட்டுப்படுத்தபட்டுள்ளது.

இதேபோல், மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், தில்லியில்தான் 80 சதவீத உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன என்றாா் அவா்.

புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை செயலா் பிரவீண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சுமாா் 14 லட்சம் முதல் 29 லட்சம் போ்வரை கரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனா். சுமாா் 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளன. இது, பல்வேறு ஆய்வுத்தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் மதிப்பீட்டின்படி, பொதுமுடக்கத்தால் 78,000 உயிா்கள் காக்கப்பட்டுள்ளன. இதேபோல், பொருளாதார வல்லுநா்கள் சிலா் வெளியிட்ட ஆய்வுத்தகவலில், பொதுமுடக்கத்தால் 23 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டதாகவும், 68,000 உயிரிழப்புகள் தவிா்க்க பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை அமைச்சகமும், இந்திய புள்ளியியல் நிறுவனமும் இணைந்து ஆய்வுமேற்கொண்டன. அதில், பொது முடக்கத்தால் சுமாா் 20 லட்சம் போ் நோய்த்தொற்றிலிருந்து காக்கப்பட்டுள்ளதும், 54,000 உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது என்றாா் அவா்.

முன்னதாக, கரோனா நோய் தொற்றை எதிா்கொள்வதில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பி சிலஊடகங்களில் வியாழக்கிழமை செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், மேற்கண்ட தகவல்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மொத்த பரிசோதனைகள்: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடுமுழுவதும் இதுவரை 27,55,714 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில், வெள்ளிக்கிழமை மதியம் வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,03,829 பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அவா் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...