நமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு நிலம் அல்ல

சீனா, பாகிஸ்தானின் நிலம் இந்தியாவுக்கு தேவையில்லை எனவும், அமைதிமட்டுமே தேவை எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

2வது முறையாக பாஜக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் ஜன்சம்வாத் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் காணொளி காட்சி மூலமாகப் பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, “நாட்டில் தலைதூக்கிவந்த மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் பிரச்சனையைத் தீர்த்து உள்நாட்டு பாதுகாப்பை மோடி அரசு வலுப் படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத செயல்களையும் நாம் கட்டுப்படுத்தி யுள்ளோம். நமது எல்லையில் ஒருபுறம் சீனா, பாகிஸ்தான் தொல்லை இருந்தாலும், நமக்குத்தேவை அமைதியும், வன்முறையில்லாத சூழலும்தான்.

இந்தியா எப்போதும் தனது எல்லையை விரிவுபடுத்தி தன்னை வலிமையான நாடாகக் காட்டிக் கொள்ள விரும்பியதில்லை. அது நமக்கு தேவையும்இல்லை. சீனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவற்றின் ஒருஅங்குல நிலத்தை கூட இந்தியா விரும்பியதில்லை. வங்கதேசப் போரின் போதுகூட, போரில் வென்றபின், அந்நாட்டின் பிரதமராக முஜிபுர் ரஹ்மானை அமரவைத்தோமே தவிர, அந்நாட்டினை கைப்பற்றவில்லை. அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் ஒரு அங்குல நிலம் கூட நமக்கு வேண்டாம். நமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு, பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுதல்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.