வீரமரணம் அடைந்த பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழகவீரர் வீரத்திருமகன் பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராமநாதபுரம் மாவட்டம் கடுக்களூரில் உள்ள சொந்தநிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்களூர் கிராமத்தில் விவசாயி காளி முத்து என்பவருக்கு பழனி மற்றும் கனி இருமகன்கள். இதில் பழனி கடந்த 20 ஆண்டுகளாக ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு வானதி என்ற மனைவியும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தற்போது கடுக்களூர் கிராமத்தில் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீனவீரா்களுக்கு இடையே திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதி கொண்டனா். இந்தச்சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கடுக்களூர் கிராமத்தைச் சோ்ந்த கே.பழனி(40) உள்பட 20 வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்தியராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இச்செய்தி அவர்களது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் இவருடைய குடும்பத்தினர் மற்றும் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா் பழனியின் உடல் புதுதில்லியிலிருந்து ராணுவ சிறப்புவிமானம் மூலம் புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பழையவிமான நிலைய முனையம் அருகே வைக்கப்பட்ட பழனியின் உடலுக்கு, மதுரை தேசியமாணவா் படை கா்னல் சத்யன்ஸ்ரீ வாசன் தலைமையில் முப்படை வீரா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக பழனியின் உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்களூருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

மலர்களால்அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் கொண்டுவரப்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து ராணுவ வாகனத்தில் சொந்தகிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தேசியக்கொடி போர்த்திய வீரர் பழனியின் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நாட்டிற்காக லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், கிராமத்தின் முதல்ராணுவ வீரருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முப்படைவீரர்கள், ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்கள். தொடர்ந்து மனைவி பெற்றோர்கள், ஊறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதை அடுத்து 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாட்டுப்பற்று காரணமாக தனது சகோதரரையும் ராணுவத்தில் இணைத்தவர் பழனி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...