அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்

தமிழக அரசு மருத்துவ மனைகளில் கொரோனாவுக்கு தரமானசிகிச்சை அளிக்கப்படுவதால், அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். “ கொரோனா பரவல் ஏற்பட்டவுடன் மக்களுக்கு பயன் படக்கூடிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். விவசாயிகளுக்கு ‘சன்மான்நிதி’ முன் கூட்டியே வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதேபோல வங்கிகளில் ‘ஜன்தன்’ வங்கி கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் ஒருகோடி பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நவம்பர் மாதம்வரை ரேஷனில் ஐந்து கிலோ அரிசி, ஒருகிலோ பருப்பு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்தக் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வோம். தமிழகத்தில் மின்கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவுக்கு அரசு மருத்துவ மனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முன்வர வேண்டும்.

கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் நியாயமாக விசாரணை நடத்தப்படவேண்டும். எனவே, கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பதவியிலிருந்து விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...