அயோத்தியில் புதியமசூதி தேவையில்லை வசீம் ரிஜ்வீ

அயோத்தியில் புதியமசூதி தேவையில்லை என உத்திரப் பிரதேசம் ஷியா முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவர் வசீம்ரிஜ்வீ  கூறியுள்ளார்.

ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான வசீம்ரிஜ்வீ  நேற்று அயோத்தி வந்திருந்தார். கர்சேவக்புரம் சென்றவர் அங்குள்ள விஷ்வஇந்து பரிஷத்தினால் செய்து வைக்கப் பட்டுள்ள ராமர் கோயிலுக்கானக் கல்தூண்களை பார்வையிட்டார்.

பிறகு அங்கு தங்கியிள்ள ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளரான சம்பக் ராயுடன் சந்திப்பு நடத்தினார். பிறகு அயோத்தியின் முக்கிய மடங்களில் ஒன்றான திகம்பர் அகாடாவின் தலைவர் மஹந்த் சுரேஷ் தாஸுடனும் சந்தித்துபேசினார்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய வசீம் ரிஜ்வீ கூறுகையில், ‘அயோத்தியில் தொழுகை நடத்து பவர்கள் குறைவாக உள்ளனர். இதனால், இங்கு புதியமசூதி கட்டவேண்டிய தேவையில்லை.

அயோத்தி என்னுடைய தாய் வீடு போன்றது. இங்கு கட்டப்பட உள்ள ராமர் கோயில் எனது நீண்ட கால விருப்பம் ஆகும்.’ எனத் தெரிவித்தார்.

ஷியா முஸ்லிம்களின் தலைவர் ரிஜ்வீ  டெல்லியின் வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடுகாடாக மாற்றவேண்டும் எனவும், நாட்டின் மதரஸாக்களில் தீவிரவாதம் வளர்வதாகவும் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது .

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...