ஆங்கிலேயனை ஓட ஓட விரட்ய சாபேகர் சகோதரர்கள்

அந்நிய ஆங்கில அரசுக்கு இந்தியர்கள் மனு மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலேயரான ஏ.ஓ.ஹ்யூம் என்பவரால் 1885இல் துவக்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத்தைச் சுதந்திரப் போராட்ட இயக்கமாக மாற்றிய பெருமை திலகரையே சாரும்.

பாலகங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு தீவிர தேசியப் போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் தான் வ.உ.சி., சிவா, பாரதி ஆகிய மூவேந்தர்கள். திலகரால்
1893இல் துவக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவும், 1897இல் துவக்கப்பட்ட சத்ரபதி வீரசிவாஜி விழாவும்

நாடெங்கும் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருவது தேசிய ஒருமைப்பாட்டின் அஸ்திவாரத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. இதேபோல் இவர் நடத்திய கேசரி பத்திரிகையும் தேசபக்தர்களை உருவாக்கும் உற்பத்தி மையமாகவே இருந்தது எனச் சொல்லலாம்.

திலகரால் ஊக்கம் பெற்ற ஆயிரக்கணக்கான தளபதிகளில் சிலர்தான் இந்த "சாபேகர்
சகோதரர்கள்' ஆவர். பின்னாளில் வீரசாவர்க்கர் போன்றவர்கள் உணர்ச்சிப் பூர்வமான தேசியப் போராட்டங்களில் ஈடுபட சாபேகர் சகோதரர்களின் வீர சாகச போராட்ட நிகழ்வுகளும் ஒரு காரணமாகும்.

ஆங்கிலேயர்களை இந்த மண்ணிலிருந்து ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். சுதந்திர தேசம் உருவாக்க ஆயுதம் தாங்கிய போராட்டமே தீர்வு என நம்பிக்கை கொண்டிருந்தனர். இதில் மூத்தவன் பெயர் தாமோதர் ஹரி சாபேகர். வயது 18 தான். பாலகிருஷ்ண சாபேகரும், வாசுதேவ சாபேகரும் இவருடைய சகோதரர்கள்,

1897ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி லண்டனில் முடிசூட்டி 60 ஆண்டுகள் ஆனதையொட்டி புனா நகரில் விருந்தும், கேளிக்கை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருந்தனர் ஆங்கில அதிகாரிகள். இந்த விழாவில் பல ஆங்கில அதிகாரிகள் கலந்து கொண்டாலும் லெப்டிணன்ட் ஓவன் லூயிஸ், லெப்டிணன்ட் அயர்ஸ்ட், பிளேக் கமிஷனர்
சார்லஸ் ராண்ட் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இதில் பிளேக் கமிஷனர் சார்லஸ் ராண்ட் திமிர் பிடித்த அதிகாரி. பிளேக் நோயைப் புனாவில் ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு எண்ணற்ற மக்களைக் கொடுமை படுத்தியவன். வீடு வீடாகப் புகுந்து அட்டூழியம் புரிந்தான். எனவே இவர்களுக்குச் சரியான
பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்தனர் சாபேகர் சகோதரர்கள்.

உடன் தனது நண்பர்களான விநாயக் ஆப்தே, மகாதேவ ரானடே ஆகியோரையும் சேர்த்துக் கொண்டனர். கேளிக்கைகளும், கொண்டாட்டங்களும் நள்ளிரவு வரை நீடித்தது. சாபேகர் சகோதரர்களும் விருந்து நிகழ்ச்சி முடிவதற்காகவே கையில் துப்பாக்கிகளுடன்
விருந்தினர் மாளிகைக்கு வெளியே காத்திருந்தனர்,

விழா முடிந்த பின் அதிகாரிகள் அவரவர் கோச் வண்டிகளில் ஏறி பயணம் செய்ய துவங்கினர். காத்திருந்த சாபேகர் சகோதரர்களும், நண்பர்களும் ஆளுக்கொரு வண்டியில் ஏறிக்கொண்டனர். ஏறிய சில நிமிடங்களிலேயே பாலகிருஷ்ண சாபேகர் லெப்டிணன்ட்
அயர்ஸ்ட்டை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான்.

தாமோதர் சாபேகர் சார்லஸ் ராண்ட் வந்த வண்டியில் ஏறி இருந்ததால் அடுத்த சில வினாடிகளில் ராண்ட்க்கும் துப்பாக்கிக் குண்டுகளை இரையாக ஆக்கினான். இதில் அயர்ஸ்ட் உடனடியாக பிணமானாலும், ராண்ட் சில நாட்கள் உயிருக்குப் போராடிய பின் ஜூலை 1897இல் மரணமடைந்தான்.

அதிர்ச்சி அடைந்த ஆங்கில அரசாங்கம் உளவுப் பிரிவை முடுக்கிவிட்டது. கொலையாளிகளை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.20,000/ பரிசு எனவும் அறிவிப்பு செய்திருந்தது. பணத்துக்கு ஆசைப்பட்ட கணேஷ் திராவிட் என்ற துரோகி காட்டி கொடுக்கவே 1897 ஆகஸ்டு 9ஆம் தேதியன்று தாமோதர் சாபேகர் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தலை மறைவாகி விட்டனர்.

1899 பிப்ரவரி 3இல் தாமோதர் சாபேகருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அப்போது தாமோதர் நீதிபதியைப் பார்த்து, "நீங்கள் என்னைத் தூக்கிலிட்டு சாகடிக்கலாம்; ஆனால், என் ஆன்மாவிற்கு மரணமில்லை மீண்டும் இந்த பாரத நாட்டில் பிறப்பேன். மறுபடியும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடுவேன்' என வீரமுழக்கம் செய்தார்.

வாசுதேவ சாபேகர் புனாவில் கைது செய்யப்பட்டார். காடுகளில் ஒளிந்து, மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த பாலகிருஷ்ண சாபேகர் சரணடைய வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டு விட்டதால் 1899இல் தாமாகவே முன்வந்து சரணடைந்தார்.

வாசுதேவ சாபேகர் தன் மனதில் அண்ணன் தாமோதர் சாபேகரைக் காட்டிக் கொடுத்த கணேஷ் திராவிட் மற்றும் அவனது சகோதரன் ராமச்சந்திர திராவிட் ஆகியோரை எப்படியும் பழிவாங்கியே தீருவது என முடிவு செய்திருந்தான்.

இந்நிலையில் தனது அண்ணன் பாலகிருஷ்ண சாபேகருக்கு எதிராக சாட்சியம் அளித்தால் உன்னை ஜாமீனில் விடுதலை செய்கிறேன் என ஆசை வார்த்தை காட்டினான் ஆங்கில அதிகாரி. இதற்குத் தான் ஒப்புக் கொள்வதாக சொல்லவே ஜாமீனில் விடு விக்கப்பட்டான் வாசுதேவ சாபேகர்.

வெளியே வந்த வாசுதேவ் 1899 பிப்ரவரி 9இல் தன் நண்பர்களும், மாணவர்களுமான வினாயக் ரானடே, காண்டே ராவ் சாத்தே ஆகியோரோடு மாறுவேடமிட்டு துரோகி கணேஷ் திராவிட் சகோதரர்கள் வீட்டிற்குச் சென்றான்.

தாங்கள் போலீஸ்காரர்கள் என்றும், உங்கள் இருவரையும் உடனே காவல்நிலையத்திற்கு அழைத்து வர வேண்டும் என எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்றும் சொல்ல அதை உண்மை என நம்பிய திராவிட் சகோதரர்கள் இருவரும் அவர்களுடன் புறப்பட்டு வந்தனர்.

தெருவில் இறங்கி சிறிது தூரம் சென்ற உடனேயே தாமோதர் சாபேகரைப் பணத்திற்காகக் காட்டிக் கொடுத்த திராவிட் சகோதரர் இருவரையும் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொன்று விட்டு ஒளிந்து கொள்ள காடு, மலைகளையெல்லாம் தேடவில்லை. நேராக வீட்டிற்குச்
சென்று நிம்மதியாகத் தூங்கினார்கள்.

வீட்டில் இருந்த வாசுதேவ் சாபேகர் மறுநாள் காலை கைது செய்யபட்டார். அண்ணனைக் காட்டிக் கொடுப்பதாகச் சொல்லி ஜாமீனில் வந்த வாசுதேவ் துரோகிகளுக்குத் தண்டனை கொடுத்தது கண்டு ஆத்திரத்தில் இருந்தனர் ஆங்கில அதிகாரிகள். மகாதேவ வினாயக் ரானடேவும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

வாசுதேவ சாபேகரை நையப் புடைக்க வேண்டும் என வெறியில், காவல் நிலையத்தில் காத்திருந்தான் ஆங்கில அதிகாரி. வாசுதேவ சாபேகரும் காவல் நிலையத்திற்குக்
கொண்டு வரப்பட்டார். எந்தவித சலனமோ, வருத்தமோ இன்றி புன்னகையுடன் வந்தான் வாசுதேவ். வந்தவன் சும்மா வரவில்லை துப்பாக்கியோடு வந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் போலீஸ் அதிகாரியை நோக்கிச் சுட்டான். அதிகாரி மயிரிழையில் உயிர் தப்பினார். காவல் நிலையத்தில் கைதியாக அழைத்து வரப்பட்டவனின் இந்தத் துணிச்சல் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
இவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது.

திலகரின் உதவியால் இவர்களுக்காக வாதாட புகழ் பெற்ற வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கின் முடிவில் வாசுதேவ் சாபேகர், விநாயக் ரானடே ஆகிய
இரு வருக்கும் மரண தண்டனையும், இவர்களுக்கு உதவி செய்த சாத்தேக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஆங்கில அதிகாரி சார்லஸ் ராண்ட் கொலை வழக்கிலும் பாலகிருஷ்ண சாபேகருடன் வாசுதேவ் சாபேகர், விநாயக் ரானடே ஆகிய இருவரையும் சேர்த்துக் கொண்டனர். இந்த
வழக்கிலும் இவர்களுக்குத் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டது.

நாளைய நம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் நாளைய நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்த வாசுதேவ் சாபேகர் 1899 மே 8ஆம் தேதியும், விநாயக் ரானடே மே
10ஆம் தேதியும் பாலகிருஷ்ண சாபேகர் மே 12ஆம் தேதியும் தூக்கிலிடப்பட்டனர். வாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. ஆனால் இவர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்பவர்கள்.

நன்றி ஈரோடு சண்முகசுந்தரம்

ஆங்கிலேயனை   , சாபேகர் சகோதரர்கள், சுதந்திரம் பற்றி, சுதந்திர தின கட்டுரைகள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...