நாடுமுழுவதும் 10 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரசாயணம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களை அசாம், மத்திய பிரதேசம்(2), ஒடிசா, தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட்டில் அமைக்க இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை அமல்படுத்தும் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. மீதமுள்ள 4 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களை உத்தரகாண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அமைப்பதற்கான மதிப்பீடுகள் நடந்துவருகின்றன.
6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களின் விவரம்:
1. மத்திய பிரதேசம்: தமோத் என்ற இடத்தில் அமைக்க பட்டுள்ள பிளாஸ்டிக் தயாரிப்பு மையத்தில் கட்டுமான பணிகள் முடிந்து, சாதனங்கள் வாங்கும்பணிகள் நடக்கின்றன. இந்த மையத்தில் ஒருஆலை தற்போது செயல்படுகிறது.
2. மத்திய பிரதேசம்: பிலாவா என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக்மையம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
3. ஒடிசா: பாரதீப் என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மைய பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
4. ஜார்கண்ட்: தியோகர் என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மையத்தில் கட்டுமான பணிகள் நடக்கின்றன.
5. தமிழ்நாடு: திருவள்ளூரில் பிளாஸ்டிக் உற்பத்தி மையம் அமைக்கும்பணி சமீபத்தில் தொடங்கியுள்ளது.
6. அசாம்: தின்சுகியா என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மையத்தில் கட்டுமான பணிகள் நடக்கின்றன.
மத்திய ரசாயண மற்றும் உர துறை அமைச்சர் சதானந்த கவுடா
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |