தீவிர யுக்திகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 5 நாட்களாக, நாட்டில் தினந்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 89,746 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 83,347 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,87,613-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று 81.25%-ஆக உள்ளது.
உலகளவில் இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம். உலகளவில் குணமடைபவர்களில் இந்தியாவின் பங்கு 19.5%.
17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் புதிய நோயாளிகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
குணமடைந்தவர்களில் 75% பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, ஒடிசா, தில்லி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.
மஹராஷ்டிராவில் புதிதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர், ஆந்திராவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |