அர்னாப் கோஸ்வாமி கைது தலைவர்கள் கண்டனம்

52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், ‛ரிபப்ளிக் டிவி’ ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பைபோலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், அர்னாப் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018 ம் ஆண்டு ‛ரிபப்ளிக் டிவி’ நிறுவனம் தரவேண்டிய நிலுவை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி, 53 வயதான இன்டீரியர் டிசைனரான அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ததாக, தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தன்னை மும்பைபோலீசார் தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார்தெரிவித்துள்ளார். தனது மனைவி, மகன், மாமனார், மாமியார் ஆகியோரையும் போலீசார் தாக்கியதாக அர்னா கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்த காட்சிகளை, ‛ரிபப்ளிக் டிவி’ ஒளிபரப்பியது.

அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு, கண்டனம்தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரசும், அதன் கூட்டணிகட்சியும் மற்றொரு முறை ஜனநாயகத்தை அவமானப்படுத்தியுள்ளது. அர்னாப் கோஸ்வாமி மற்றும் ‛ரிபப்ளிக் டிவி’ மீது மாநிலஅரசு எடுத்த நடவடிக்கை, ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல். இது அவசர நிலையை பிரதிபலிக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்க்கவேண்டும்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: அர்னாப் கைதுசெய்யப்பட்டது, பத்திரிகை சுதந்திரம்மீது நடத்தப்பட்ட தாக்குதல். இது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறது. மஹாராஷ்டிராவி் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மத்திய ரவி சங்கர் பிரசாத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அர்னாப் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது, தேவையற்றது. கவலை தரும் விஷயம். 1975 அவசர நிலையை எதிர்ப்பதுடன், பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடி வருகிறோம். பத்திரிகைசுதந்திரத்தை நசுக்கும் மஹாராஷ்டிரா அரசின் செயலை கண்டு, காங்கிரஸ் மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...