மத்திய அரசின் கல்வி அமைச்சகமானது 5-ஆவது ஆயுர்வேத தினத்தையொட்டி ஆன்லைனில் விநாடிவிநா போட்டியை நடத்துகின்றது. அகத்தியரின் பிறந்த நட்சத்திரம் சித்தமருத்துவ தினமாகக் கொண்டாடப் படுவதைப் போல தன்வந்திரியின் பிறந்த நட்சத்திரத்தை ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத தினமாகக் கொண்டாடுகின்றது. கடந்த 13 ம் தேதிதான் 5-ஆவது ஆயுர்வேததினம் நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிரதம மந்திரி அன்றைய தினம் (13.11.2020) ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தையும் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதகல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
மாணவர்களிடையே ஆயுர்வேத மருத்துவமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஆயுர்வேத தினத்தை வாய்ப்பாகக் கருதி ஆன்லைன் விநாடிவிநா போட்டியை அறிவித்து 13.11.2020 ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றது.
”காற்றைத் தூய்மைப் படுத்துவதில் தாவரங்களின் பயன்பாடு & ஆயுர்வேதம் மூலம் கோவிட்-19 தொற்றைக் கையாளுதல் “ என்ற தலைப்பிலான இந்த ஆன்லைன் விநாடிவிநா போட்டியில் 5 நிமிடங்களில் 20 கேள்விகளுக்குப் பதில்அளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 20 ஆகும். தவறானவிடைக்கு மதிப்பெண் கழித்து கொள்ளப்படமாட்டாது. ஏற்கனவே தொகுத்து வைக்கப்பட்டுள்ள கேள்வி வங்கியில் இருந்து கேள்விகள் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேட்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் உடனடியாகக் கல்விஅமைச்சகத்தின் மின் – ன்றிதழ் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு தகுதிச்சான்றிதழை என்சிஇஆர்டி நிறுவனம் வழங்கும். குறைந்த நேரத்தில் அதிகபட்ச சரியானவிடைகளை அளித்தவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்தப்போட்டியில் 11 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒருமுறை மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் http://quiz.mygov.in என்ற இணைய முகவரிக்குச்சென்று போட்டிக்கான பக்கத்தைத் தேர்ந்தெடுத்து பெயர், முகவரி, மொபைல் எண், ஆதார் எண் மற்றும் இ-மெயில் ஆகியவற்றை உள்ளீடுசெய்துவிட்டு போட்டிக்கான கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கலாம்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |