வாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரம்

”ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக விளக்கும் வாரிசு அரசியல், ஒரு புதுவடிவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது. இதை ஒழிக்க வேண்டுமெனில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பார்லிமென்டின் மைய மண்டபத்தில் நேற்று நடந்த, தேசிய இளைஞர் பார்லிமென்ட் திரு விழாவின் இரண்டாம் ஆண்டு நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:குடும்பப் பெயரை பயன்படுத்தி, தேர்தலில் வெற்றிபெறும் நடைமுறை, கணிசமாக குறைய துவங்கி உள்ளது. அதேநேரம், வாரிசு அரசியல் முழுதுமாக ஒழியவில்லை.நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு, இந்த வாரிசு அரசியல் மிகப்பெரிய காரணமாக உள்ளது.

தங்கள் குடும்பத்தை சேர்ந்த முந்தைய தலைமுறையினர், தாங்கள்செய்த ஊழல்களுக்கு தண்டிக்கப்படாதது, புதிய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தைரியத்தை அளிக்கிறது.சொந்த குடும்பத்திலேயே பலஉதாரணங்கள் இருப்பதால், அவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை. நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற தைரியத்துடன் உள்ளனர். தங்கள் குடும்பத்தையும், குடும்ப அரசியலையும் மட்டுமே பாதுகாக்க நினைக்கும் சுயநல அரசியல் தலைவர்கள் இன்றைக்கும் உள்ளனர்.

இவர்களால், நாட்டின் ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. வாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது. அதன் திறமையின்மை, நாட்டுக்கு பெரும் சுமையாகிறது.நேர்மையானவர்களுக்கு, மக்கள் ஆட்சியில் இடம்அளிக்க துவங்கிவிட்டனர். எனவே, நாட்டின் நலனுக்காக, இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.மற்ற துறைகளைகளில் உள்ளதைபோல, இளைஞர்களின் புதிய சிந்தனை, கனவு, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை, அரசியலுக்கும் தேவை.இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...