நாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர்களை போல, ஆக வேண்டும்

”பொங்கல் நாளில் பூஜைகள் செய்வதுடன், நமக்கு உதவியவர்களுக்கு நன்றிசெலுத்தி, நம்மை சுற்றி இருப்பவர்களுடன், இனிதான உறவை மேம்படுத்திக் கொள்வது என்ற, ‘சங்கல்பத்தை’ எடுத்துக்கொள்ள வேண்டும்,” என, ஆர்.எஸ்.எஸ்., அகிலபாரத தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீநவசக்தி கடம்பாடி சின்னம்மன் கோவிலில், 11ம் ஆண்டு பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆர்எஸ்எஸ்., அகிலபாரத தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று சிறப்பித்தார். அவருடன், தென்பாரத தலைவர் டாக்டர் வன்னியராஜ், சென்னை மாநகர தலைவர் சந்திரசேகர், பொது செயலர் கோபால கிருஷ்ணன், மாதவரம் கிராமசங்க தலைவர் பாலசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

மோகன் பாகவத்திற்கு, பிரசன்ன நரசிம்ம பெருமாள் கோவில்சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் வழிபாடுசெய்தார். அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் நடந்த, கோ பூஜை மற்றும் பொங்கல் பூஜையிலும் பங்கேற்றார். சிறுவர்கள் பங்குபெற்ற, விளையாட்டு போட்டிகளை கண்டுரசித்தார். மேலும், பக்திப்பாடலுடன், அவரை சிறுவர்கள் வரவேற்றனர்.

பின், மோகன் பாகவத் பேசியதாவது: உங்கள் அனைவருக்கும், பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரதம்முழுக்க பொங்கல் கொண்டாடப்பட்டாலும், தமிழகத்தில், மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுவது சிறப்பானது. முன்னர், திருப்பூரில் இருந்தபோது, மாட்டுப்பொங்கல் விழாவில் பங்கேற்றேன். இன்று சென்னையில் இருப்பதால், உங்களுடன் பொங்கல்விழாவில் கலந்து கொள்கிறேன்.

இந்த நாளில், நம்பப்படுவது என்னவென்றால், சூரியனின் ரதத்தில் ஒரே ஒருசக்கரம் தான் இருக்கும்.  ஆனாலும், தினமும், அவர், கிழக்கில் இருந்து மேற்கிலும், மேற்கில் இருந்து கிழக்கிலும் பயணித்து கொண்டிருக்கிறார்.

அதனால், பூஜை என்ன என்றால், நாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர்களை போல, ஆக வேண்டும் என முயற்சிக்க வேண்டும் என்பது தான்.உதாரணத்திற்கு, லட்சுமி ‘சக்தி’ ரூபம். நமக்கும், அதுபோல் சக்தி கிடைக்க வேண்டும் என, முயற்சிக்க வேண்டும். சூரியன் ‘தவ’ ரூபம். தொடர்ந்து தவமிருந்து ஓய்வின்றி உழைக்கிறார். நாமும் ஓய்வின்றி உழைக்கவேண்டும்.

நாளைக்கு கோ பூஜை. நான் இன்றே கோபூஜை செய்தேன். நமக்கு, கோ மாதா அளிக்ககூடிய பல உதவி மற்றும் பொருட்களுக்கு, நன்றி செலுத்தவே,கோ பூஜை செய்கிறோம்.நம்மை சுற்றி உள்ள சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்கள் உதவியாக உள்ளனர். அவர்களுக்கும், நாம் நன்றிசெலுத்த வேண்டும். நாளை மறு தினம் காணும் பொங்கல். அன்று நாம், உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அவர்களோடு மட்டும், நம் வாழ்த்துக்களை நிறுத்திக்கொள்ள கூடாது. நமக்கு உதவக்கூடிய முடிதிருத்துவோர், துணி துவைப்போர், சலவை தொழிலாளி என, அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவர்கள் நலமுடன் இருக்க, நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்.இந்தநாட்களில், நாம் சர்க்கரை பொங்கல் உண்டு ருசிக்கிறோம். இது, இனிப்பான விஷயம். அதைப்போல, நமது சொற்களும் இனிப்பாக இருக்கவேண்டும். மற்றவரை காயப்படுத்தும் கடும்சொற்களை, எப்போதும் பேசக்கூடாது.

அதை, முழுமையாக தவிர்க்க வேண்டும். அதைத்தான், ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நாவினாற் சுட்டவடு’ என்ற குறள், நமக்கு உணர்த்துகிறது. இனிய வார்த்தைகளால் மட்டுமே பேசவேண்டும்.பொங்கல் என்பது பூஜை செய்யவும், நன்றி செலுத்தவும் மட்டுமல்ல, ‘சங்கல்பம்’ எடுத்துக்கொள்ள கூடிய தினமாகும். அதனால், நமக்கு உதவிய மற்றும் நம்மைசுற்றி உள்ள அனைவருக்கும் நன்றி செலுத்தவும், அவர்களது குறைகளை மன்னித்து, அவர்களுடன் இனிய உறவை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...