தனது ஈகோ காரணமாக விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளை தடுத்த மம்தா

மே.வங்கத்தில், தனதுஈகோ காரணமாக, விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளை தடுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, விவசாயிகளை புறக்கணித்து வருவதாக பாஜக., தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

மால்டா மாவட்டத்தில் நடந்தபேரணியில் நட்டா பேசுகையில், பிரதமர் கிஷான் திட்டத்தை, விவசாயிகளுக்கு கிடைக்கசெய்ய விடாமல் தடுத்து மம்தா அநீதி இழைத்து விட்டார். அவரின் ஈகோ காரணமாக, மத்திய அரசின் சலுகைகள் விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை. இதனால், மாநிலத்தில் 70 லட்சம் விவசாயிகள், தங்களுக்கு ஆண்டுதோறும் கிடைக்கவேண்டிய ரூ.6 ஆயிரத்தை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெறாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனால், விவசாயிகள் மத்தியில் திரிணமுல் காங்கிரசுக்கு செல்வாக்கு இழந்துவருவதை உணர்ந்த, மம்தா தற்போது, நிதியுதவி திட்டத்தை அமல்படுத்த ஒப்பு கொண்டார். சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகள் நலனில், மோடி அரசும், பா.ஜ.,வும் உறுதிபூண்டுள்ளன.

நான் இங்குவரும் போது, ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டு என்னை வரவேற்றனர். ஆனால், இந்த கோஷத்தை கேட்டு மம்தா ஏன் கோபப்பட்டார் என தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...