தற்சார்பு இந்தியா என்பது நம் உணர்வு சார்ந்தது

தற்சார்பு இந்தியா என்பது, வெறும்கோஷமல்ல; நம் உணர்வு சார்ந்தது. இதனால், மக்களிடையே தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அதன் தாக்கத்தை எல்லையில் பார்த்திருப்பீர்கள்,” என, பிரதமர் நரேந்திரமோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

‘நாஸ்காம்’ எனப்படும், தேசிய மென்பொருள் மற்றும் சேவைநிறுனங்கள் சங்கத்தின் சார்பில், தொழில்நுட்பம் மற்றும் தலைமைபண்பு தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:’ஆத்மநிர்பர் பாரத்’ எனப்படும், தற்சார்பு இந்தியா என்பது வெறும் கோஷமல்ல. அது, நம் உணர்வுசார்ந்தது; நம் மண்ணைச் சார்ந்தது என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பம், உள்நாட்டில் தயாரிக்கப் பட்டது என, நம் நாட்டின் வளர்ச்சியுடன் இணைந்தது. இது, மக்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.லடாக்கில் சீனாவின் அத்துமீறலை, நம்ராணுவம் முறியடித்துள்ளது. அங்கு முகாமிட்டிருந்த, சீன படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இதுவே, தற்சார்பு இந்தியா, மக்களிடையே ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையின் ஒருஉதாரணம்.நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு உயர்த்துவதற்கு, தற்சார்புமுயற்சிகளே முக்கியம். அந்த வகையில், ‘மேப்பிங்’ எனப்படும் நாட்டின் வரைபடங்கள் தயாரித்தல் மற்றும் புவி சார் தகவல்களை சேகரிப்பதில், புதிய சீர்திருத்தத்தை ஏற்படுத்திஉள்ளோம்.இதுவரை இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. நம்நாட்டு மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது, இந்த அரசு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. அதன்படியே, இந்தகட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.அதனால், ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் உட்பட, நம் தொழில்துறை மிகுந்த பலனை பெற உள்ளன. புவிசார் தகவல்சேகரிப்பு வாயிலாக, உள்நாட்டில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில் வளர்ச்சியை காணலாம்; 22 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

நாஸ்காம்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:உலக நாடுகளுக்கு தலைமையேற்கும் மிகப்பெரும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. நம்மிடம் அறிவுத்திறன் உள்ளது; புதுமை கண்டுபிடிப்புகள் உள்ளன. ஆனால், அவை நடைமுறைக்கு வருவதே முக்கியம்.நாட்டின் சிறியநகரங்களில், பலதிறமையான கண்டுபிடிப்பாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. அதற்கு உதவுவதற்காக, இரண்டாம் நிலை நகரங்களில் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.கொரோனா காலத்தில், மற்றதுறைகள் தத்தளித்தாலும், தகவல் தொழில்நுட்பத் துறை, 2 சதவீத வளர்ச்சியை அடைந்தது.

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில், உள்நாடு, வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், தென் மாநிலங்களில், பல்வேறு பகுதிகள் பயன் அடையும்.

மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க, சூரிய மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்துவதன் வாயிலாக, மின்சாரத் தேவை குறைக்கப்பட்டு வருகிறது.சூரிய மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்கள், விவசாயிகளுக்கு உதவியாக உள்ளன. இந்தியாவில் அதிகரிக்கும் எரிசக்தி தேவையை சமாளிக்க, மாற்று எரிசக்திகள் உதவியாக இருக்கும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. சுத்தமான மற்றும் பசுமையான எரிசக்திக்காகவும், எரிசக்திக்காக மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைப்பதற்காகவும், உழைக்க வேண்டியது நம் கடமை. கடந்த, 2019 – -2020ம் ஆண்டில், உள்நாட்டின் தேவைக்காக, 85 சதவீத எண்ணெய் மற்றும் 53 சதவீத இயற்கை எரிவாயுவை, இந்தியா இறக்குமதி செய்தது; இதற்காக யாரையும் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை.

ஆனால் எரிசக்தியில், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதில், முந்தைய அரசுகள் அதிக கவனம் செலுத்தி இருந்தால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு உதவ, எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என, ஊக்கப்படுத்தி வருகிறோம். இயற்கை எரிவாயுவை, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...