10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்

இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை நீண்டகாலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அரசு தரப்பிலிருந்து நிறைய திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வந்தாலும் இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் இல்லை இன்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அதன்மூலம் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறப்புத்திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று (அக்டோபர் 22) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு பெற்றவர் களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வரும் வேலை வாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு பிரச்சாரங்களுக்கு இந்த வேலைவாய்ப்புமேளா புதிய வடிவம் அளித்துள்ளது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கருத்தில் கொண்டு மத்திய அரசு 75,000 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பணிநியமனக் கடிதங்களை வழங்கி வருகிறது. ஒரேநேரத்தில் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் ஒரு பாரம்பரியம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முடிவுசெய்தோம். இதனால் திட்டப்பணிகளை ஒருகுறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கூட்டு மனோபாவம் துறைகளில் உருவாகிறது. வரும் நாட்களிலும், தேர்வர்கள் அவ்வப்போது அரசிடம் இருந்து நியமன கடிதங்களைப் பெறுவார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜக ஆளும் பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதே போன்ற மேளாக்களை ஏற்பாடு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அமிர்தகாலத்தில், வளர்ந்த இந்தியாவின் உறுதியை நிறைவேற்றுவதற்காக நாம் தற்சார்பு இந்தியா என்ற பாதையில் முன்னேறி வருகிறோம். இந்தியாவை தன்னம்பிக்கை பாதைக்கு கொண்டுசெல்வதில் புதுமையாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத்துறையைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

லட்சக் கணக்கான காலிப் பணியிடங்களுக்கான தேர்வுப் பணியை சிலமாதங்களில் முடித்து பணி நியமனக் கடிதங்களை வழங்குவது, கடந்த 7-8 ஆண்டுகளில் அரசு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது. இன்று வேலை கலாச்சாரம் மாறிவருகிறது. நமது கர்மயோகிகளின் முயற்சியால் அரசுத்துறைகளின் செயல் திறன் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் சுயசான்றொப்பம் மற்றும் நேர்காணலை ரத்து செய்தல் போன்ற நமது ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இளைஞர்களுக்கு உதவியுள்ளன” என்று கூறினார்.

இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்த சாதனை நிகழ்த்த பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...