தி.மு.க-வின் கலாசாரமே முருக கடவுளை அவமதிப்பது, கந்த சஷ்டிக் கவசத்தை அவமதிப்பவர்களை ஆதரிப்பது

தமிழக அரசியல் வட்டாரத்தில் சமீபகாலமாக அடிபடும்பெயர் சி.டி.ரவி. பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான இவர், கர்நாடகாவைச் சேர்ந்தவர். பா.ஜ.க-வின் தமிழக மேலிட பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டபிறகு தமிழக அரசியலில் இவரது பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. இந்தநிலையில்தான், சி.டி.ரவியைச் சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினேன்.

‘‘பொதுவாகவே, ‘தமிழகக் கலாசாரத்துக்கு எதிராகத்தான் பாஜக செயல்படுகிறது’ என்றொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே..?’’

‘‘மத்தியில் ஆண்டகாங்கிரஸுடன் தி.மு.க கூட்டணியில் இருந்தபோதுதான், ஜல்லிக்கட்டுக்கு எதிராக ‘மிருக சித்ரவதை’ என்று உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. அதனாலேயே ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. எங்கள் அரசாங்கம் வந்தபிறகு, அந்த அஃபிடவிட்டை மாற்றி, ‘இது கலாசார விளையாட்டு; தமிழர்களின் அடையாளம்’ என்று வாதிட்டோம். அதை ஏற்று, தடையை விலக்கியது நீதிமன்றம். தமிழககலாசாரத்துக்கு யார் எதிரானவர்கள், யார் ஆதரவானவர்கள் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.’’

‘‘மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகமக்களுக்குத் தெரியாமலேயே போகின்றன என்பது இங்குள்ள மோடி ஆதரவாளர்களின் குமுறலாக இருக்கிறதே?’’

‘‘உண்மைதான். கடந்த ஆறுவருடங்களில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் நிதியை, தமிழகமக்கள் நலத்திட்டங்களுக்காக மோடி அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், இங்குள்ளவர்கள் திட்டங்களின் பெயரையே மாற்றி சொல்கிறார்கள். சில திட்டங்களை மாநில அரசு செய்ததாக பிரசாரம் செய்கிறார்கள். அதனால் தான், இப்போதெல்லாம் எங்களின் தொண்டர்கள், தமிழகமக்கள் மத்தியில் ‘இது மோடி திட்டம்’ என்று சொல்லிப் பதியவைக்கிறார்கள்.’’

“திமுக நடத்துவது வாரிசுஅரசியல்… அ.தி.மு.க நடத்துவது ஜனநாயக அரசியல்!” ‘‘திராவிடக் கலாசாரத்தை தாண்டி பா.ஜ.க இங்கே காலூன்ற முடியுமா?’’

‘‘திராவிடக் கலாசாரம் என்பது என்ன..? ஜல்லிக்கட்டு, பொங்கல், முருகக்கடவுள், பரதநாட்டியம், கர்னாடக சங்கீதம், கம்பராமாயணம், திருக்குறள்… இவையெல்லாம்தானே… முருக கடவுளை மதிப்பது தானே திராவிடக் கலாசாரம்? ஆனால், தி.மு.க-வின் கலாசாரமே முருக கடவுளை அவமதிப்பது, கந்த சஷ்டிக் கவசத்தை அவமதிப்பவர்களை ஆதரிப்பது. மொத்தத்தில் திராவிடக் கலாசாரம் என்ற பெயரில் ஊழல், வாரிசு அரசியல், பிரித்தாளும் அரசியல்… என மக்களை வஞ்சிக்கிறார்கள். இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி, நிச்சயம் நாங்கள் தமிழகத்தில் காலூன்றுவோம்.’’

‘‘மீத்தேன், நியூட்ரினோ, நீட் தேர்வு, இயற்கை எரிவாயு எடுக்கும்திட்டம் என்று மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்துக்கு எதிரானவை என்று கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘இந்தத் திட்டங்கள், தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும். புதியகல்விக் கொள்கை மூலம் மாணவர்களின் திறன் மேம்பாடு அதிகரிக்கும். நீட்தேர்வில் டாப்பர் லிஸ்ட்டில் தமிழக மாணவர்கள் இடம்பெறுகிறார்கள். மக்கள்நலனுக்காக எந்தத்திட்டம் கொண்டுவந்தாலும் தி.மு.க-வினர் எதிர்க்கிறார்கள். மோடி, அமித்ஷா வந்தால் ‘கோ பேக்’ என்கிறார்கள். எதையெடுத்தாலும் எதிர்க்கும் மனநிலையிலுள்ள தி.மு.க., காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் திட்டங்களைக் குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.’’

‘‘டெல்லியில் விவசாயிகள் போராட்டம் உலக அளவில் கவனம் பெறுகிறதே?’’

‘‘எங்கள் அரசாங்கம் விவசாயிகள்பக்கம் நிற்கிறது. 90 சதவிகித விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்கள். விவசாயிகளுக்காக எவ்வளவோ திட்டங்களைக் கொண்டுவந்தவர் பிரதமர் மோடி. ஆனால், விவசாயிகள் என்ற பெயரில் எங்களின் அரசியல் எதிரிகள்சிலர், எங்கள் கொள்கைகளை எதிர்க்கும் வேறு சிலருடன் சேர்ந்து போராட்டம் என்றபெயரில் நாடகமாடுகிறார்கள்.’’

‘‘ `கடந்த நான்கரை வருடங்களில் அ.தி.மு.க அரசுசெய்த ஊழல்களுக்கு வெண் சாமரம் வீசியவர்கள்தானே பா.ஜ.க-வினர்’ என்று எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே?’’

‘‘தி.மு.க-வினர்தான் ஊழல்வாதிகள். தி.மு.க ஓர்அரசியல் மாஃபியா. அவர்களை ஒப்பிட்டால், அ.தி.மு.க நடத்துவது பெட்டர் அரசாங்கம். கோவிட்காலத்தில் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. திமுக நடத்துவது வாரிசு அரசியல். எடப்பாடி பழனிசாமி நடத்துவது ஜனநாயக அரசியல்.”

‘‘டெல்லியில் டி.டி.வி.தினகரன் உங்களை ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறதே?”

‘‘இல்லை… அது வெறும் வதந்தி.”

‘‘சசிகலா விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?’’

‘‘நாங்கள் அதிமுக-வுடன் இருக்கிறோம். சசிகலா, தினகரன் உள்ளிட்டோரின் பிரச்னைகளெல்லாம் அவர்களின் உட்கட்சி விஷயங்கள். நாங்கள் அதில்தலையிட மாட்டோம். இப்போதைக்கு, நடப்பதைக் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.’’

‘‘தி.மு.க-வை வீழ்த்துவது மட்டும்தான் உங்கள் தேர்தல்திட்டமா?’’

‘‘அதுமட்டுமல்ல… இரட்டைஇலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளில் வென்று, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் நுழைவார்கள். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும்.’’

‘‘சீன விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை கருத்து சொல்லவில்லை. சீனா என்ற வார்த்தையையே பிரதமர் உச்சரிப்பதில்லை என்று ராகுல் காந்தி சொல்கிறாரே?’’

‘‘ராகுல் காந்திக்கு சீனாவுடன் ஏதோ ஒப்பந்தம் இருக்கிறதுபோல… மோடி ஜிக்கு அப்படி எதுவுமில்லை. ராகுல் குடும்பமும், காங்கிரஸ் கட்சியும் சீனாவுடன் அரசியல் பிசினஸ் செய்கிறார்கள். மோடி ஜி, அரசியலில் படிப்படியாக வளர்ந்து பிரதமரானவர். ராகுல், வாரிசு அரசியலில் நேரடியாக வந்தவர். மோடி ஜி தேசநலனைத்தான் சிந்திப்பார். ராகுல், குடும்பநலனைத்தான் சிந்திப்பார். ராகுல், அவரின் குடும்பத்தை அதிகாரத்தில் அமரவைக்க நினைக்கிறார். மோடி ஜி, இந்தியாவை உலக அரங்கில் பவர்ஃபுல் நாடாக்க நினைக்கிறார். இருவரையும் ஒப்பீடு செய்யக் கூடாது.’’

நன்றி ஜூனியர் விகடன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...