மதர் நல்லிணக்கத்தினை ஸ்டாலின் அவர்களே பின்பற்றுவதில்லை

தமிழக சட்டப்பேரவைகூட்டத்தை பாஜக வெளிநடப்பு செய்தது. இதன் பிறகு பாஜக சட்டமன்கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது மத நல்லிணக்கம் குறித்துபேசும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை பின்பற்றுவது இல்லை என குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தை பாஜக வெளிநடப்பு செய்தது. இதன் பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக சட்டமன்றகட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

சட்டமன்றத்தில் முதல்வர் மத்திய அரசின் குடியுரிமைதிருத்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். மதநல்லிணக்கம் குறித்து முதல்வர் பேசி உள்ளார்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால், எந்தபாதிப்பும் இல்லை என சட்டமன்றத்தில் பேசி வெளிநடப்புசெய்து உள்ளோம். தமிழக முதல்வர் மட்டும் இந்துமத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை.

ஆனால், அவர் இன்று மதநல்லிணக்கம் பற்றி பேசி உள்ளார். நாட்டின் நலம், பாதுகாப்பு கருதியே குடியுரிமை திருத்த சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்து உள்ளது. இவ்வாறு பாஜக நயினார் நாகேந்திரன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...