காஷ்மீர் ரூப பவானி தேவி

காஷ்மீரத்தில் சரிகா பர்வத் என்ற மலைப் பகுதியில் உள்ளது சரிகா தேவி ஆலயம். புராணக் கதையின்படி அந்த இடத்தில் பல அசுரர்கள் தொல்லை தந்து வந்தபோது சரிகா தேவி ஒரு பறவை உருவில் வந்து அவர்கள் வாழ்ந்து வந்த குகையின் நுழைவிடத்தின் வாயிலில் தன் அலகால் கொத்தி வந்திருந்த பூமியைப் போட்டு வாயிலை மூடிவிட அவர்கள்

வெளியில் வர முடியாமல் அதற்குள்ளேயே இறந்தனராம். அந்த தேவியை தினமும் மாதவ ராவ் ஜோ என்பவர் வந்து வணங்கிச் செல்வார். அப்போது ஒரு நாள் அவர் முன் அந்த தேவி ஒரு சிறுமியின் உருவில் கருவறையில் தோன்ற அவர் தனக்கு அவளே மகளாகப் பிறக்க வேண்டும் என அவளிடம் வேண்டிக் கொண்டார்.

அது போல அதற்கு அடுத்த வருடமே, அதாவது 1621 வருடமே அவருக்கு அலக்யேஷ்வரி என்ற பெயர் கொண்ட ஒரு மகள் பிறந்தாள். குழந்தை வளர்ந்து பெரியவள் ஆயிற்று. அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அவள் ஆன்மீக நாட்டம் கொண்டு இருந்ததினால் அவளால் இல்லறத்தில் ஈடுபட முடியவில்லை. அவள் புகுந்த வீட்டில் அவளை சந்தேகப்பட்டனர். அவளை மாமியார் குறை கூறிக் கொண்டே இருந்தாள். இரவில் சாதனாக்களை செய்ய அவள் சரிகா தேவியின் ஆலயத்துக்குச் செல்வதை தவறாகப் புரிந்து கொண்டனர்.

அலக்யேஷ்வரியின் கணவன் ஒருநாள் இரவு ஆலயத்திற்கு கிளம்பிச் சென்று கொண்டு இருந்த அவளை அவளுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து சென்றார். ஆனால் அலக்யேஷ்வரிக்கு அவர் பின்னால் வருவது தெரியும். ஆலயத்தின் அருகில் சென்றதும் அவள் திரும்பிப் பார்த்து அவரை தன்னுடன் உள்ளே வருமாறு கூறினாள். ஆனால் அவர் முன்னால் பெரிய கடல்போல காட்சி தோன்ற பயந்து போய் திரும்பிப் போய்விட்டார்.

இன்னொரு சம்பவம். அலக்யேஷ்வரி வீட்டில் இருந்து பண்டிகைக்காக பாயஸம் செய்து அனுப்பி இருந்தனர். அவளுடைய மாமியார் 'இத்தனை சிறிய பாத்திரத்தில் உள்ளது எப்படிப் போதும். எனக்கு ஏகப்பட்ட உறவினர்கள் . அவர்கள் அனைவரும் வந்ததும் இதை எப்படி பறிமாறுவது ' எனக் கேட்க அலக்யேஷ்வரி அவளிடம் 'நீங்கள் பாத்திரத்தின் உள்ளே என்ன உள்ளது எனப் பார்க்காமல் கரண்டியால் பாயஸத்தை ஊற்றிக் கொண்டே இருங்கள், கவலை வேண்டாம்' என்றாள். வந்த அனைவருக்கும் பாயஸத்தை ஊற்றிக் கொடுக்கக் கொடுக்க பாயஸம் வந்து கொண்டே இருந்தது. கோபமடைந்த மாமியார் பாத்திரத்தில் என்னதான் உள்ளது என அதனுள் பார்த்தாள். அதற்குள் சிறு அரிசிப் பருக்கைகளே ஒட்டிக் கொண்டு இருந்தது. இப்படி பல மகிமைகளை காட்டி வந்தவள் தன்னுடைய மாமியாரின் கொடுமைகளையும், கணவனின் மூடத்தனத்தையும் வெறுத்து வீட்டை விட்டு வெளியேறினாள்.

காஷ்மீரத்தில் ஜேயஷ்யரூத்திரா என்ற இடத்திற்குச் சென்று பன்னிரண்டரை வரும் தவம் புரிந்தாள். அதன் பின் மணிகாவுன் என்ற கிராமத்தில் சென்று தங்கினாள். காட்டில் சென்று தவம் செய்து வந்தாள். ஒரு மாட்டு இடையனின் பசு மாடு தானாகவே அவள் அமர்ந்து உள்ள இடத்திற்குச் சென்று அவளுடைய பாத்திரத்தில் தானாகவே மடியில் இருந்து பாலை சுறந்து ஊற்றிவிட்டு வந்த கொண்டிருந்த மாயத்தைக் கண்டான். அது முதல் அந்த பசு அதிகப் பாலை கொடுக்க ஆரம்பித்தது.

அந்த செய்தி அனைத்து இடத்திலும் பரவ அலக்யேஷ்வரி தெய்வீக சக்தி பெற்றவள் என்ற நம்பிக்கை கிராமத்திடையே பரவ அவளிடம் அனைவரும் மரியாதையுடன் பழகினர். அவள் சில நாட்கள் அங்கு இருந்தப் பின் சகோல் என்ற இடத்திற்குச் செல்ல அங்கும் அவள் மகிமைகள் தொடர அவளுக்கு பக்தர்கள் அதிகரித்தனர். அவள் அருனிளால் குருடான பெண் சிறுமி ஒருவள் பார்வை பெற்றாள். அந்த இடத்தில்தான் அவள் ஞானம் பெற்றதினால் அவள் ரூப பவானி என்ற பெயரையும் பெற்றாள்.

அதற்கு இடையில் ரூப பவானி எனப் பெயரடைந்த அலக்யேஷ்வரியின் சகோதரன் அவளைத் தேடி வந்து அவளுடைய சிஷ்யனாக மாறினார். அவர் மூலம் ரூப பவானி சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேலான ஆன்மீக செய்திகளை கவிதைகள், பாடல்களாக தந்தாள். 1791 ஆம் ஆண்டு அவள் மரணம் அடைய அவளை ஒரு பெட்டியில் வைத்து சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவள் அதில் இருந்து அவள் மறைந்து விட்டாளாம்.

சுடகாட்டிற்கு பெட்டியை எடுத்துக் கொண்டு போனவர்களிடம் அவள் நடந்து சென்றதை தான் பார்த்ததாக ஒரு வழிப்போக்கன் கூற பெட்டிடைய இறக்கித் திறந்தப் பார்த்தவர்கள் அதிர்ந்தனர். ரூப பவானி அதில் இல்லை. அவளுடைய தலை முடியும் மலர்களும் மட்டுமே இருந்தனவாம். ரூப பவானி சமாதி எய்து விட்டாலும் அவளுக்கு காஷ்மீரில் பல பக்தர்கள் உள்ளனர். அவள் மகிமைகள் கணக்கிட முடியாது.

Tags; காஷ்மீர் , ரூப பவானி  தேவி , காஷ்மீர் இந்து கோயில் ,காஷ்மீர் இந்து, ஆலயம் , காஷ்மீர் இந்து மக்கள், கடவுள் , ஆலயங்கள்

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...