தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று மத்திய இணை அமைச்சர் விகே சிங் தெரிவித்தார்.
மதுரை ஐராவத நல்லூரில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பாக ராம ரத யாத்திரை தொடங்கி வைக்க வருகைதந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணைஅமைச்சர் வி.கே..சிங் செய்தியாளர்களிடம் கூறியது:
இன்று ஒரு முக்கியமான நாள். ராம ரத யாத்திரையை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். நாடுமுழுவதும் ராமர் ரத யாத்திரைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரத யாத்திரை செல்லும் இடங்களில் சிறுவர்கள், பொதுமக்கள், தொழில் நடத்துபவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்றநிதியை மனமுவந்து அளிக்கின்றனர்.
மேலும் ராமர்ஆலயம் கட்டப்படுவதை நாடுமுழுவதும் உள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ராமர் ஆலயம் கட்டப்படுவதோடு ராமராஜ்ஜியம் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்துவருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கப்படும்.
தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது சுழற்சிமுறையில் ஏற்ற இறக்கங்களுக்கு உள்பட்டது. சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலைநிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
கடந்த 2011 – 2014 ஆகிய ஆண்டுகளில் சமையல் எரிவாயுவிலை ரூ.1,240 ஆக இருந்தது. தற்போது ரூ.750 என்ற அளவில்தான் உள்ளது. பெட்ரோல்விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதன் ஒருபகுதியாக பெட்ரோல் டீசல் விற்பனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படலாம் என்ற ஆலோசனையும் உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
2concentrate