வளமான தமிழகம் வலிமையான பாரதம்

தமிழக மக்களே! சற்றுநேரம் ஒதுக்கி இதை முழுமையாக படியுங்கள் !! படித்தபின்பு நினைத்து பாருங்கள்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி யார்?

1. ஒரு மிகசாதாரணமான சேலம் மாவட்டத்தின் ஓரமாக உள்ள ஒருசிறு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த சாமான்யன்,

2. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவங்கப்பட்டு, பிறகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் ஆட்சி நல்ஆட்சி செய்ய… சிறப்பான முறையில் வளர்ந்த அஇஅதிமுகவில் அம்மா அவர்களின் மறைவுக்குப்பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட உட்ச பட்ச குழப்ப சூழ்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றவர்.

3. அரசியலில் மட்டுமல்ல, கட்சியிலும் பெரியகுழப்பம். இந்நிலையில் தன் எளிமையால் யதார்த்தமான அன்பால் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆட்சியிலும் நான்கு ஆண்டுகள் சிறப்பான தமிழகத்தை வளமாக்கி மக்களை, ஆட்சியை வழி நடத்தியவர்.

4. எம்ஜிஆர் அவர்களையே ஆட்டிப்படைத்த திமு.கவினரின் தில்லுமுல்லுகளை உடைத்தெரிந்து மக்கள் நலஆட்சியைத் தந்தவர்.

5. அரசு அதிகாரிகளின் பலரின் கபடசூழ்ச்சிகளை எல்லாம் பொடிபொடியாக்கி நல்லதொரு நிர்வாகம் தந்தவர்.

6. ஜாதி மதபேதமின்றி அனைவரையும் சமமாக மதித்து தமிழகம் தலைநிமிர உழைப்பை தந்தவர்.

7. நாள்தோறும் மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகண்டவர். இவரை மக்கள் யாரும் எளிமையாக பார்க்கமுடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர்.

8. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 இடஒதுக்கீடு வழங்கி ஏழைவீட்டு மாணவர்கள் வாழ்வில் விளக்கேற்றி அவர்களுக்கு இலவச கல்வியும் தந்தவர்.

9. தமிழகத்தின் பெரும்பான்மையான சமூகமான வன்னியர்களின் நீண்டநாள் கோரிக்கையான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடை கொடுத்து நன்மதிப்பைப் பெற்றவர்.

10. விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் ஏற்பட பலஇடங்களில் நீர் மேலாண்மை திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், மேட்டூர் அணை உபரிநீரை ஏரிகள் குளங்களுக்கு பயன்படுத்த திட்டம் கொண்டுவந்து அதை நிறைவேற்றியும் காட்டியவர், மேலும் குடிமராமத்து திட்டம், நதிநீர் இணைப்பு, காவிரி பாயும் தஞ்சாவூர் பகுதியை சிறப்புவேளாண் மண்டலமாக அறிவித்தது எடப்பாடியாரின் வரலாற்று சாதனைகள். குடிமராமத்து பணிகளால் இன்று ஓரளவுக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ந்திருப்பது நிதர்சனமான உண்மை.

11. தமிழகத்துக்கென 11 மருத்துவ கல்லூரிகள், 2 கால்நடை மருத்துவகல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், நடமாடும் மினிமருத்துவமனை, கிராமங்களுக்கு மினிகிளினிக் அமைத்தது என பல்வேறு சிறப்பான பணிகளுக்காக எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு சந்தேகம் ஏன்?

12. புயல், மழைக் காலங்களில் தனி நிபுணர் குழுக்களை அமைத்து சிறப்பாக செயல் பட்டது பாராட்ட வேண்டாமா?

13. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பாணியில் மத்திய அரசுடன் இணக்கத்தில் இருந்து மத்திய அரசுநிதியை அதிகளவு பெற்று, பல மக்கள் நல்திட்டங்களுக்கு பெற்றுத்தந்ததற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு ஏன் தரக்கூடாது?

14. எதிரகட்சியினர் தன்னை தனிப்பட்ட முறையிலும், தாயை கேவலப்படுத்தி பேசும் போதும் அவர்களை தரமான முறையில் பதில் அளிக்கும் நாகரிக மனிதன் இவரை தான் நாம் மீண்டும் முதல்வராக தேர்வுசெய்ய வேண்டும்.

15. உயர்ந்த முதல்வர் பதவில் இருந்தபோதும் எளிமையாக நடந்துகொள்வதும், தான் இருக்கும் பொறுப்பின் கௌரவம் பார்க்காமல் மக்கள் நலப்பணியை திறம்பட செய்துவரும் எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக தேர்வு செய்வது நமது கடமையாகும்.

16. இந்த பத்தாண்டுகால அஇஅதிமுக ஆட்சியில்…ரவுடியிசம் இல்லை. கட்டபஞ்சாயத்து  இல்லை. கரண்ட்கட் இல்லை. நிலஅபகரிப்பு இல்லை. மாநாடு, தேர்தல் நிதி, பொதுக் கூட்ட நிதி என நிதிவசூல் இல்லை. கடைகளில் மாமூல் வசூலிப்பார் என்று யாரும்இல்லை. காவல் நிலையல்களுக்கு மிரட்டல் இல்லை.

கொஞ்சம் யோசித்து வாக்களியுங்கள்

17. இன்று தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறி இருக்கிறது. தொழில் செய்ய அனைவருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது.

18. கொரோணா காலகட்டத்தில் இந்தியாவில் இல்லாதளவுக்கு ஆய்வுக்கூட்டங்களை நடத்தி… கோடிக்கணக்கான மக்களுக்கு பரிசோதனைகள் செய்து, ஆட்சியர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தஉதவிகள், மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வழிவகை செய்த எடப்பாடியாரின் தலைமையிலான அரசின் பணி பாராட்டத்தக்கதல்லவா?

19. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு,தொழில் செய்ய பாதுகாப்பு,
இருக்கும் சொத்துகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியாரின் ஆட்சி தொடர்ந்து இருந்தால்தான் தமிழக மக்கள் நிம்மதியாக வாழமுடியும். இதற்கு… முன் காலங்களில் எதிர்கட்சி இருந்த ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வுகளே சாட்சி.

20. ஜெயலலிதா அம்மா அவர்களின் திட்டங்களான அம்மா உணவகம், அரசு பள்ளிகளின் தரம்உயர்வு, தமிழகமெங்கும் சிறப்பான சாலைவசதிகள் மேம்பாடு, அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான குடிநீர் திட்டப்பணிகள், அரசு மருத்துவகாப்பீடு, ரேசன் கடைகளில் இலவச அரிசி, பெண்களுக்கு டூவீலர் மானியம், விவசாயிகள் பயன் பெறும் பல்வேறு திட்டங்கள், குடிமராமத்து பணிகள், படித்த பெண்களுக்கு திருமண உதவி, கொரோனா காலத்தில் நிதி உதவி, இலவச சமயல் பொருட்களை வழங்கியது, பொங்கல் காலத்தில் 2,500 ரொக்க உதவி என அரசின் திட்டங்களில் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருபயனையாவது பெற்று இருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மக்கள் நலப்பணி திட்டங்கள் சரியாக சென்றடைவது இந்த அஇஅதிமுக ஆட்சியில் மட்டும்தான்.

ஆகவே மீண்டும் தொடர வேண்டும்! தொடரவேண்டும்!! மக்களுக்காக முழுநேரமும் பாடுபாடும் எடப்பாடியாரின் ஆட்சிதான் மீண்டும் அமையவேண்டும்.

தமிழகத்தில் இன்று போல அமைதி, இதேவளம், இதே வளர்ச்சி , மக்களிளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால்…

தேர்ந்தெடுப்போம் எடப்பாடியாரை முதல்வராக! முதல்வராக்க
வாக்களிப்போம்!! இரட்டை இலை சின்னத்திற்கே!!
மற்றும் கூட்டனி கட்சிகளின் தாமரை மாம்பழம் சின்னத்திற்கே!!

வளமான தமிழகம் எடப்பாடி பழனிசாமி தலைமையில்! வலிமையான பாரதம் பாரத பிரதமர் மோடி அவர்களின் தலைமையில்!!
வாழ்க ஜனநாயகம்!!! ஜெய்ஹிந்த்!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய அரசும் மாநில அரசும் இணக் ...

மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இறுக்க வேண்டும்- அரசியல் பேசும் ஆதினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு ...

மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்த ...

மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ...

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ...

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலைப்பணிகல் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் கர்நாடகாவிற்குள் அனைத்து ...

பேரிடர் நிவாரண நிதியை எப்போது த ...

பேரிடர் நிவாரண நிதியை எப்போது தருவீர்கள் என்ற MP கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் 'நிவாரணம் கிடையாது' என ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில் ...

நெத்தன்யாகுவுக்கு பிடிவாரண்ட் ...

நெத்தன்யாகுவுக்கு பிடிவாரண்ட் – ஜெய் சங்கர் விளக்கம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான பிடிவாரண்ட் குறித்து ...

இந்தியாவில் முதலீடு செய்வது லா ...

இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின் மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...