தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டது. கட்சியின் பிரமுகர்கள் பலர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் நேற்றோடு முடிந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பழநிமுருகனை தரிசித்தார். மலைக்கோயிலில் தங்கரதம் இழுத்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம்தொகுதியில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப் பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். திமுகவுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கிடையாது. பணநாயகத்தின் மீது தான் அக்கட்சி நம்பிக்கை வைத்துள்ளது. இதற்கான விடை மே 2-இல் தெரியவரும். அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். ஆட்சியில் பங்கேற்பதுபற்றி எங்களுடைய கட்சி தலைமைதான் முடிவெடுக்கும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |