கரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க முடியும்

கரோனா வைரஸ் முதல்அலையை தடுத்தது போன்று, 2-வது அலையையும் நம்மால் தடுக்கமுடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்றுமாலை முக்கிய ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பிறகு நாட்டுமக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:

கரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல்கவனம் செலுத்தவேண்டும். அடுத்த 3 வாரங்கள் மிகமுக்கியமானது. இந்தகாலத்தில் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும்.

மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முதல் அலையை விட தற்போது வைரஸ்பரவல் அதிகமாக உள்ளது. இது கவலை அளிக்கிறது.

எனினும் கரோனா முதல் அலையின்போது இருந்ததைவிட இப்போது போதிய உள்கட்டமைப்பு வசதியுடன் தயார்நிலையில் உள்ளோம். முதல் அலையின்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். தற்போது 2-வது அலைகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கருதுகிறேன்.பெரும்பாலான மாநில அரசுகளின் செயல்பாடும் போதுமானதாக இல்லை.

கரோனா வைரஸ்பரவல் அதிகரிப்பது குறித்து அச்சப்படவேண்டாம். மாநில அரசுகள் பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லவேண்டும். குறிப்பாக 70 சதவீதம் அளவுக்கு ஆர்டி பிசிஆர் பரி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது 72 மணி நேரத்துக்குள் குறைந்தபட்சம் 30 பேரை கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முதல் கரோனா வைரஸ் அலையை தடுத்ததுபோன்று, சிறந்த நிர்வாகத்தின் மூலம் 2-வது அலையையும் நம்மால் தடுக்கமுடியும்.

கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதிவரை கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நாட்களாக கடைபிடித்து, அதிகம் பேருக்கு தடுப்பூசிபோட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலைவரை ஊரடங்கை அமல் செய்யவேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...