கொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்

உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழா, கொரோனா பரப்பும் மையமாகமாறி வருகிறது. 670 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துகிடக்கும் கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதல்கட்டமாக 2,171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் மத்தியப்பிரதேச மகா நிர்வானி அகாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒருடுவீட்டில், ஜுனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியிடம் தொலை பேசியில் பேசியதாகவும், இரண்டு ஷாஹி ஸ்னான்” (புனித குளியல்) நடந்திருப்பதாகவும், இந்த ஆண்டு கும்பமேளா நாடுநடத்தும் கொரோனாவுக்கு எதிரான போரின் அடையாளமாக இருக்கவேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுத்தேன்.” என்று பிரதமர் மோடி இந்தியில் டுவீட் செய்துள்ளார்.

அதாவது அடையாளம் என்றவகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்பது மோடி கோரிக்கையாகும். பிரதமர் மோடியின் டுவீட்டுக்கு பதிலளித்த சுவாமி அவ்தேஷானந்த்: “பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள்மதிக்கிறோம். உயிர்களைக் காப்பாற்றுவது புனிதமானது.

அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றவேண்டும் என்று சாதுக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘நிரஞ்சனி அகாடா’ என்ற அமைப்பு, கும்பமேளாவை இன்றுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், கும்பமேளா இன்றுடன் முடித்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...