நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவுபெற்றதாக இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தில், ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், மின்னணு சொத்து அட்டை விநியோகத்தை, பிரதமர் தொடங்கிவைத்தார்.
காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், 4 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு மின்னணுசொத்து அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் பேசிய பிரதமர் மோடி,
கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் கிராமப்புறங்களை சென்றடையாமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், இந்த ஆண்டு மீண்டும் இதேசவாலை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கிராமப்புற மக்களின் பங்களிப்புடன்தான் தடுப்பூசி திட்டம் வெற்றிபெறும் என குறிப்பிட்ட பிரதமர்,
கிராமப்புறத்தில் உள்ள மக்களும் தடுப்பூசி இரண்டுதவணைகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரதமர்,
நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவுபெற்றதாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |