மருத்துவர்களுக்கு 1 கோடி தருவேன் என்று கூறிவிட்டு 25 லட்சமாக குறைத்த ஸ்டாலின்

எடப்பாடியார் ரூ.50 லட்சம் கொடுத்தார்… ஸ்டாலின் ரூ.25 லட்சமா குறைச்சிட்டார்.. டாக்டர்கள் கவலை..!

கொரோனாவுக்கு எதிரானபோரில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் கொரோனா தொற்றி உயிரிழக்கும்பட்சத்தில் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண உதவியை திமுக அரசு 25 லட்சம் ரூபாயாக குறைத்துள்ளது டாக்டர்களை கவலைஅடைய வைத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரானபோரில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் கொரோனா தொற்றி உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண உதவியை திமுக அரசு 25 லட்சம் ரூபாயாக குறைத்துள்ளது டாக்டர்களை கவலைஅடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்மாதம் கொரோனாதொற்று கண்டறியப்பட்டது. பிறகு மார்ச் 20ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் கொரோனாவுக்கு எதிரானபோரில் முன்களப் பணியாளர்களாக களம் இறங்கியுள்ளனர் மருத்துவர்கள். சென்னையில் கொரோனா உச்சத்தில் இருந்த போது ஒரே டாக்டர் ஒரே நாளில் மூன்று ஷிப்டுகளை எல்லாம் பார்க்கும்நிலை இருந்தது. இதே போல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு கொரோனா தாக்கும் ரிஸ்க் மிகஅதிகம். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் தங்கள் உயிரை பணயம்வைத்து மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

மேலும் மருத்துவர்கள் கொரோனாபணியில் இருந்த காரணத்தினால் தங்கள் வீடுகளுக்குகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு வீட்டிற்கு சென்றால் குடும்பத்தினருக்கு கொரோனா தாக்கும் அபாயம்இருந்தது. இதனால் மருத்துவர்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஐந்துநட்சத்திர ஓட்டல்களில் அறை ஏற்பாடு செய்து அவர்களை அங்கேயே தங்கவைத்து மருத்துவ பணிகளில் அதிமுக அரசு ஈடுபடுத்தி வந்தது. இதற்கிடையே எதிர்பார்த்ததை போலவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்ற ஆரம்பித்தது.

கொரோனா தொற்றுக்கு ஆளானா மருத்துவர்கள் உயிர்இழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனை அடுத்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடுவழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அறிவித்ததை போலவே கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு தமிழகஅரசு சார்பில் உடனுக்கு உடன் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது. அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த முக.ஸ்டாலின், மருத்துவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியது போதாது ஒருகோடி ரூபாயாக உயர்த்திவழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அறிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையே நடைபெற்று முடிந்ததேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில் மற்றும் அதற்கு முன்பு என சுமார் 43 மருத்துவர்கள் கொரோனாதொற்றால் உயிரிழந்திருந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்க வேண்டியிருந்தது. எனவே மு.க.ஸ்டாலின் கடந்தஆண்டு வலியுறுத்தியதை ஏற்று மருத்துவர்களின் குடும்பத்திற்கான நிதி உதவியை 1 கோடி ரூபாயாக உயர்த்துவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிவிப்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைபார்த்து அதிர்ந்தது மட்டும் அல்லாமல் ஏமாற்றமும் அடைந்துள்ளனர் மருத்துவர்கள். கடந்தஆண்டு எதிர்கட்சியாக இருந்தபோது மருத்துவர்களின் குடும்பத்திற்கு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்குவந்த பிறகு ஏற்கனவே அதிமுக அரசு வழங்கிவந்த 50 லட்சத்தையும் 25 லட்சமாக குறைத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று மருத்துவர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். மேலும் இனி எல்லாமே இப்படித்தான் இருக்குமோ என்று மருத்துவர்கள் கவலைதெரிவிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...