அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும்

அயோத்தி நகர வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலை 2024-ம் ஆண்டுக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அயோத்தியை நவீனமயமாக்கும் திட்டம், ரயில் நிலையம், விமானநிலையம் அமைப்பது குறித்து யோகி விளக்கம் அளித்தார்.

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம்அமைக்க மாநில அரசு ரூ.1,000 கோடியும், மத்திய அரசு ரூ.240 கோடியும் ஒதுக்கி உள்ளது என்று அப்போது பிரதமரிடம் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார். அப்போது அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது அயோத்திக்கு செல்லவேண்டும் என்ற ஆசையை வருங்கால சந்ததியினர் மத்தியில் நாம் ஏற்படுத்தவேண்டும் என மோடி வலியுறுத்தினார்.

ஒவ்வொரு இந்தியரின் கலாச்சார நினைவிலும் பொறிக்கப்பட்ட நகரமாக அயோத்தி இருக்கவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அயோத்தியில் பக்தர் களுக்கான தங்குமிடவசதிகள், ஆசிரமங்கள், மடங்கள், ஓட்டல்கள், பல்வேறு மாநிலங்களின் சார்பில் அமைக்கப்படும் மாளிகைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. மேலும் அங்கு ஒரு சுற்றுலாவசதி மையம், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆகியவையும் கட்டப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-

One response to “அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...