மோடி சரத்பவார் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இந்தசந்திப்பு ஒருமணி நேரம் நீடித்ததாக பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் தேர்தலில் தாம்போட்டியிட விரும்பவில்லை என்று சரத்பவார் கூறிய நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் புதிய அணியை உருவாக்க சரத்பவார் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக பிரசாந்த்கிஷோருடன் ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக சரத்பவார் தலைமையில் வலுவானகூட்டணி அமைக்கப்படும் என்று பரவலாக பேச்சு எழுந்தது. மேலும் எதிர்க் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் சரத்பவாரை களமிறக்க திட்டமிட்டதாகவும் கடந்த சிலநாட்களாகவே சரத்பவாரை மையமாக வைத்து பல்வேறு யூகச் செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

குஜராத்தில் சிலமாதங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத்பவார் ரகசியமாக சந்தித்தார் என்ற செய்திகள்வெளியாகின. அப்போதே குடியரசுத்தலைவர் தேர்தலில் சரத்பவாரை முன்னிறுத்த பாஜக பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கிறதா என்கிற கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமித்ஷாவும், எதையும் வெளிப்படையாக கூற முடியாது என்று கூறி நழுவி விட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பேட்டியளித்தார் சரத்பவார். குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிட போகிறேன் என்கிற தகவலில் உண்மையே இல்லை. 300 எம்.பி.க்களை கொண்டிருக்கும் ஒருகட்சிக்கு எதிராக போட்டியிட்டால் என்ன முடிவுகள் வரும் என எனக்கு நன்றாகவே தெரியும். குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் நான் இல்லவே இல்லை என்று திட்டவட்டமாககூறினார்.

பிரசாந்த் கிஷோர் என்னை 2 முறை சந்தித்து பேசினார். அப்போது அவரது ஐபேக் நிறுவனம் தொடர்பாகமட்டுமே பேசினோம். 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி தலைமை குறித்தோ குடியரசுத்தலைவர் தேர்தல்குறித்தோ நாங்கள் எதுவுமே பேசவே இல்லை. என்று தெரிவித்த அவர் தேர்தல் வியூகப்பணிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாகவே என்னிடம் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னமும் காலம்இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மாறக் கூடும். 2024 லோக்சபா தேர்தலுக்கான எந்தகூட்டணிக்கும் நான் தலைமை ஏற்கப் போவதும் இல்லை என்றும் சரத்பவார் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துபேசியுள்ளார் சரத்பவார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்துள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடவிரும்பவில்லை என்று சரத்பவார் கூறிய நிலையில் நிகழ்ந்துள்ள இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து பேசப்பட்டது. சீன எல்லையில் தற்போதையநிலை குறித்து ராஜ்நாத்சிங் எடுத்துரைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூல ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியா பிரகாசிக்கும் -மோடி பெருமிதம் 'தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தா ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தான் அரசு -பிரதமர் மோடி சாடல் '' காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக் கட்சி. அதனை பாகிஸ்தான் ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை க ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை கேள்வி உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தும்படி, கூட்டணிக் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசனை லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...