ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம் தாம், அப்படித்தான் இருக்கிறது முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் மீதான காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் பரிவு.
சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் 43 புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, ரவி சங்கர் பிரசாத், சதானந்த கெளடா, பிரகாஷ் ஜாவடேகர் உள்பட 12 மூத்த அமைச்சகர்கள் விடுவிக்கப்பட்டனர், இதில் இளையவர் பலருக்கும் வாய்ப்பளிக்க பட்டுள்ளது, அனுபவசாலிகள் திரும்ப கட்சி பணிகளுக்கு அழைக்க பட்டுள்ளனர். அதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் ஒருவர்.
கொரோனவை கட்டுப்படுத்த பிரேசிலில் 4 சுகாதாரத் துறை அமைச்சர்களையும், செக் குடியரசு 5 சுகாதாரத்துறை அமைச்சர்களையும் பணியமர்த்தியது. இங்கிலாந்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றப்பட்டதையும் நாம் சமீபத்தில் கண்டோம். இது உலகுக்கு புதிதும் அல்ல. அதே போன்று நம்நாட்டிலும் மத்தியிலும் , மாநிலத்திலும் அமைச்சரவை மாற்றம் என்பது இயல்பான ஒன்றே.
ஆனால் ஹர்ஷ்வர்தன் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டார் என்கிறார்கள், முன்னால் காங்கிரஸ் அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெய்ராம் ரமேஷ் போன்றோர்.
பிரதமா் மோடி தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை குழுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்கிற ரீதியில் பேசுகிறார் காங்கிரஸ் முன்னணித் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா. இது வேடிக்கையாக உள்ளது
மத்தியில் முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அமைச்சரவை மாற்றங்களே இல்லாமல் இயங்கிவிட வில்லை. ஆனால் அன்று அது பல கூட்டணி பேரங்களின் அடிப்படையிலான ஒன்றாக, பல கோடிகளை குவிக்கும் வாயிலாகத்தான் இருந்தது. லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் உயிரை அடமானமாக வைத்துதானே அன்று திமுக முக்கிய இலாக்காக்களையே பெற்றது. 2ஜி என்ற மாபெரும் ஊழலையே படைத்தது.
சமீபத்தில் மகாராஷ்டிரா காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த அமைச்சர் அனில் தேஷ்முக் பார் உரிமையாளர்களிடம் மாதம், மாதம் 100 கோடி வரை கப்பம் வசூலிக்க போய் மாட்டிக்கொண்டு பதவி விலக வில்லையா?.
ஆனால் அப்படி போன்ற எந்த நிகழ்வும் இங்கு நிகழ்ந்திட வில்லையே!, இங்கு மாற்றம் என்பது மக்களுக்கு சேவை செய்திடவே, அதையும் விரைந்து செய்திடவே, முந்தையவரை விட பிந்தையவர் வேகமாக ஓடுவார் என்பதே. எனவேதான் இங்கு சாமானியனும் மத்திய அமைச்சராகிறான். ஆனால் சோனியா காந்தியின் ஒட்டுமொத்த பேராசைக்கு மன்மோகன் சிங்கின் மூலம் நாட்டையே பலிக்கிடாவாக்கிய காங்கிரஸ் இப்படியெல்லாம் பேசலாமா?.
நன்றி தமிழ் தாமரை VM வெங்கடேஷ்
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |