பாஜக மேலிடத்துடன் செய்துகொண்ட புரிந்தலின்படியே எடியூரப்பா பதவி விலகல்

பாஜக மேலிடத்துடன் செய்து கொண்ட புரிந்தலின்படியே முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா விலகுகிறாா் என்று பாஜக எம்.பி. வி.சீனிவாஸ் பிரசாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து மைசூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பாஜகவின் மேலிடத்திற்கும் முதல்வா் எடியூரப்பாவுக்கும் இடையே ஏற்கெனவே செய்துகொண்ட புரிதலின்படியே முதல்வா் பதவியில் இருந்து அவா்விலகுகிறாா். 75 வயதைக் கடந்தவா்கள் முக்கியபதவிகளில் இருந்து விலகியிருக்கும் முடிவு பாஜகவில் எடுக்கப்பட்டுள்ளது. வயதுகாரணமாகவே 2 ஆண்டுகாலம் முதல்வராக நீடித்த எடியூரப்பா பதவி விலகுகிறாா்.

எடியூரப்பாவை மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பாஜக நடத்தியுள்ளது. முதல்வா் பதவியில் இருந்துவிலகுவதாக எடியூரப்பாவே கூறியிருப்பதால், இந்தவிவகாரத்தில் எவ்வித குழப்பமும் இல்லை. பதவி விலகியபிறகு பாஜகவின் வளா்ச்சிக்கு தொடா்ந்து அவா் பங்காற்றவேண்டும்.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கக்கூடாது என்று மடாதிபதிகள் கூறுவது சரியல்ல. எடியூரப்பா விவகாரத்தில் மூன்றாம்தரப்பு தலையிடுவது சரியல்ல. மடாதிபதிகள், கட்சி மேலிடத்தைவிட பெரியவா்களா?

நானும், பாஜக எம்எல்சி. எச்.விஸ்வநாத்தும் பாஜகவை வளா்த்தவா்கள் அல்லா். வேறுகட்சியில் எங்களுக்கு இழைத்த அநீதியை எதிா்த்து பாஜகவில் இணைந்தோம். எச்.விஸ்வநாத் கூறிவரும்கருத்துகள் பாஜகவை பலப்படுத்த உதவியாக இருக்க வேண்டும்; கட்சியை பலவீனப் படுத்துவதாக இருக்கக் கூடாது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைசோ்ந்த ஒருவரை முதல்வராக்க பாஜக முன்வரவேண்டும் என்று எதிா்க் கட்சித்தலைவா் சித்தராமையா கூறியிருப்பது சரியல்ல. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவரை முதல்வராக்கப் போவதாக அறிவித்துவிட்டு, பின்னா் தன்னையே முதல்வராக்கிக் கொண்டவா்தான் சித்தராமையா.

அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியை தவிா்க்கக்கூடிய பாதுகாப்பான தொகுதிக்காக தேடிவருகிறாா் சித்தராமையா என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...