கர்நாடகாவின் புதியமுதல்வராக பாஜக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் பசவராஜ் பொம்மை. லிங்காயத்சமுதாயத்தைச் சேர்ந்த இவரை எடியூரப்பாக முதல்வராக முன்மொழிந்தார். இவர் தற்போது சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சராக உள்ளார்.
பசவராஜ் பொம்மை, உடுபபி மற்றும் ஹாவேரி உடுப்பி மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராகவும் பதவிவிகித்துள்ளார். முன்னதாக நீர்வளத்துறை மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
கர்நாடகாவின் ஹூப்ளியில் 1960ம் ஆண்டு ஜனவரி 28ம்தேதி பிறந்தவர் பசவராஜ் பொம்மை. கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்ஆர் பொம்மையின் மகன்தான் இந்த பசவராஜ் பொம்மை. அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐக்கிய ஜனதா தளததில் தனது அரசியல்பயணத்தை ஆரம்பித்தார்.
தர்வாட் தொகுதியில்இருந்து 1998ம் ஆண்டு முதல் 2004 வரை கர்நடாகா சட்டமேலவை உறுப்பினராக இரண்டுமுறை தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2008ம் ஆண்டு பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். 2008ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பாஜக சார்பில் காவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகான் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார். தற்போது சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத் துறை அமைச்சராக உள்ளார்.
பிஇ பட்டதாரியான பசவராஜ் பொம்மை விவசாயமும் செய்துவருகிறார். இவர் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தகாலக்கட்டத்தில் எண்ணற்ற நீர்ப்பாசன திட்டங்களை கொண்டுவந்தார். கர்நாடகாவில் நீர்ப்பாசன விஷயங்களைப் பற்றி தீவிரமாக அறிந்துவைத்துள்ள இவர் கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகானில் இந்தியாவின் முதல் 100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்தியவர் ஆவார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |